நீங்கள் சிங்கப்பூரில் வேலை செய்பவரா?? அப்படியென்றால் இதை தெரிந்து கொள்ளுங்கள்!!

நீங்கள் சிங்கப்பூரில் வேலை செய்பவரா?? அப்படியென்றால் இதை தெரிந்து கொள்ளுங்கள்!!

சிங்கப்பூரில் சட்ட திட்டங்கள் மிகவும் கடுமையாக இருக்கும் என்பது பலரும் அறிந்ததே.வெளிநாட்டு ஊழியர்களுக்கு அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கும். மற்ற நாட்டில் வேலை பார்க்கும் போது விபத்து ஏற்பட்டால் அவர்களுக்கான இழப்பீடுகளை அந்நாடு வழங்குமா? என்பது சரியாக தெரியாது. ஆனால்,சிங்கப்பூரில் கண்டிப்பாக உங்களுக்கான நல்ல தீர்வு கிடைக்கும். உங்கள் மீது தவறு இல்லையெனில் அவர்களால் ஆன அனைத்து ஒத்துழைப்புகளையும் அளிப்பார்கள்.

அதைப்பற்றி முழு விவரமாக இப்பதிவில் பார்ப்போமா!!
ஓர் உதாரணமாக : குருசாமி முத்துராஜ் என்ற வெளிநாட்டு ஊழியருக்கு 2019-ஆம் ஆண்டு 29 ஆம் தேதி விபத்து ஏற்பட்டது. அந்த துயர சம்பவத்தால் அவருக்கு முதுகில் பயங்கரமான காயம் ஏற்பட்டது.அவருக்கு ஆப்ரேசன் செய்யப்பட்டது. சிங்கப்பூரில் அவரால் வேலை செய்ய முடியாது என்று மெடிக்கல் சான்றிதழ் கொடுக்கப்பட்டது.கடந்த 2023 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு திருப்பி அனுப்பி விட்டார்கள். அவர் வேலை செய்த கம்பெனியில் இருந்து எந்த இழப்பீடும் வழங்கவில்லை. ஆனால் அவர் வழக்கு சரியாக தொடராததால் வழக்கை முடித்துவிட்டார்கள்.

2023 ஆம் ஆண்டு மீண்டும் வழக்கை விசாரிக்க கோரி MOM இல் மேல்முறையீடு செய்தார்.

MOM இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அவருக்கு சரியான இழப்பீடு தொகையை வாங்கி தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது போன்ற சம்பவங்களாக இருந்தாலும், நீங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்றால் MOM இல் சென்று தாராளமாக புகார் அளிக்கலாம்.