தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!! நிலைகுலைந்த கட்டிடங்கள்!! அச்சத்தில் மக்கள்!!

தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!! நிலைகுலைந்த கட்டிடங்கள்!! அச்சத்தில் மக்கள்!!

சிங்கப்பூருக்கு வடகிழக்கே தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவானது.

இந்த சம்பவம் ஏப்ரல் 3ஆம் தேதி(இன்று) காலை 7.58 மணி அளவில் ஏற்பட்டது.

இதனை அடுத்து தைவான், பிலிப்பைன்ஸ் மற்றும் தெற்கு ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.பிலிப்பைன்ஸ் தற்போது சுனாமி எச்சரிக்கையை ரத்து செய்துள்ளது.

நிலநடுக்கத்தால் குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. டஜன் கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அங்குள்ள பல கட்டிடங்கள் நிலைகுலைந்துள்ளன.

மேலும் ஒரு மீட்டர் உயர அலைகள் பதிவாகலாம் என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

பிலிப்பைன்சின் சில கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களை உயரமான இடங்களுக்கு வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்திருந்தனர்.

மேலும் சிங்கப்பூருக்கு சுனாமி பாதிப்பு ஏற்படாது என்றும், அதிர்வுகள் உணரப்பட்டதாக தகவல் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.