சிங்கப்பூரில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள புதிய மாற்றம்!!

சிங்கப்பூரில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள புதிய மாற்றம்!!

சிங்கப்பூர் சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள சிக்னலில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

சிக்னல்களில் உள்ள Red light கேமரா இனி வேகத்தின் கட்டுப்பாட்டை கண்காணிக்கும். ஓர் உதாரணமாக 50 கிலோ மீட்டர் முதல் 60 கிலோ மீட்டர் வேக கட்டுப்பாடு உள்ள சாலையில் செல்லும்போது அதில் நீங்கள் எவ்வளவு கிலோ மீட்டர் வேகத்தில் செல்கிறீர்கள் என்பது கண்காணிக்கப்படும்.

அதனால் சிங்கப்பூரில் வாகனம் ஓட்டுபவர்கள் கேமரா உள்ள சிக்னல்களில் கடந்து செல்லும் போது மிகவும் கவனமாக செல்வது நல்லது.

50 கிலோ மீட்டர் முதல் 60 கிலோ மீட்டர் வேகக்கட்டுபாடு கேமரா உள்ள சிக்னலில் நீங்கள் 61 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றால் கூட அபராதம் விதிக்கப்படும்.அதோடு மட்டுமல்லாமல் உங்களது டிரைவிங் லைசென்ஸில் உள்ள புள்ளிகளை இழக்க நேரிடும்.