Tamil Sports News Online

சிங்கப்பூருக்கு புதிதாக வேலைக்கு வரும் பொழுது ஏஜென்டிடம் கேட்க வேண்டிய கேள்விகள்!நீங்கள் ஏமாறாமல் வரலாம்!

சிங்கப்பூருக்கு புதிதாக வேலைக்கு வரும் பொழுது கேட்க வேண்டிய கேள்விகளைப் பற்றித் தெரிந்துக்கொள்வோம்.

நாம் வெளிநாடு வேலைக்கு செல்வதற்கு ஏஜென்ட்களின் பங்கு அதிகம் உள்ளது. அவர்களில் ஒரு சிலர் ஏமாற்றுவர்களாகவும் இருக்கின்றனர். பெரும்பாலான போலி ஏஜென்ட்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர். சமூக ஊடகங்களில் வரும் விளம்பரங்களைப் பார்த்து ஏமாந்து விடாதீர்கள்.பின்னர், எவ்வாறு ஏஜென்ட்களை தெரிந்துக் கொள்ளலாம்? என்ற கேள்வி எழுந்திருக்கும். அதாவது, உங்களுக்கு தெரிந்தவர்கள் மூலமாகவோ அல்லது சிங்கப்பூரில் இதற்கு முன் ஆட்களை அனுப்பி வைத்தவர்களாக இருக்க வேண்டும். ஏஜென்ட் உங்கள் ஊரில் உள்ளவராக இருக்க வேண்டும் அல்லது உங்கள் சுற்று வட்டாரத்தில் உள்ளவராக இருப்பவர்களை அனுகுவது நல்லது. இக்கேள்விகள் அனைத்து பாஸ் க்கும் பொருந்தும்.

1)வேலைப் பற்றிய விவரம்: ஏஜென்ட்களிடம் நாம் எந்த வேலைக்காக செல்லவிருக்கிறோம் என்று கேட்க வேண்டும். அதைப் பற்றிய முழு விவரத்தையும் தெரிந்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், சிங்கப்பூர் வேலைக்கு வந்த பிறகு நீங்கள் படித்ததிற்கும், பார்க்கும் வேலைக்கும் சமந்தம் இல்லாமல் போக கூட வாய்ப்பு இருக்கிறது. அதன்பின், கட்டியப் பணம் திரும்ப கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாகி விடும். ஏஜென்ட்கள் வேலைப்பார்க்கும் இடத்தை மாற்றி தருவார்களா?என்பதும் கேள்விகுறியே.!சிங்கப்பூரில் நாம் எதிர் பார்க்கும் வேலை அமைவதும் அரிது. அதனால், வேலைப் பற்றிய முழு விவரத்தையும் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

2) சம்பளம் : நாம் நாடு கடந்து வேலைக்காக பணத்தைச் செலவிட்டு வெளிநாட்டு வேலைக்கு வருகிறோம். நாம் கட்டிய பணத்திற்கான உரிய சம்பளம் கிடைக்கவில்லை என்றால் நாம் கட்டிய பணம் வீணாகி விடும். இதனால் ஏஜென்ட்களிடம் வேலைப் பற்றிய முழு விவரத்தை அறிந்து பிறகு அதற்கு எவ்வளவு சம்பளம் என்று கேட்டு தெரிந்துக் கொள்ள வேண்டும்.

3)தங்கும் இடம் : சிங்கப்பூரில் வேலைக்கு வருவோர்கள் Room rent க்கு எவ்வளவு செலவு ஆகும் என்பதைப் பற்றியும் தெரிந்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், சிங்கப்பூரில் ஒரு சில கம்பெனிகளில் pcm மற்றும் cpr பெர்மிட்களுக்கு மட்டுமே சிங்கப்பூர் விதிகளின் படி room rent சம்பளத்திலிருந்து கழித்துக் கொள்ளலாம்.ஒரு சில கம்பெனிகளில் சம்பளத்திலிருந்து room rent கழித்தால் MOM ல் புகார் கொடுக்கலாம்.அதனால் ஏஜென்ட்களிடம் இதனைப் பற்றி ஏஜென்ட்களிடம் முழுமையாகக் கேட்டு தெரிந்துக் கொள்ள வேண்டும்.

4)முன்பணம் : சிங்கப்பூர் வேலைக்கு முன்பணம் கட்ட வேண்டுமா? என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். S-pass மற்றும் E-pass மூலமாக வருவதென்றால் குறைந்த அளவு முன்பணம் செலுத்துங்கள்.இதைத் தவிர மற்ற பெர்மிட்களுக்கு முன்பணம் செலுத்த தேவையில்லை.ஏனென்றால்,மற்ற பெர்மிட்களுக்கு கம்பெனிகளில் முன்பணம் செலுத்த சொல்ல மாட்டார்கள்.மற்ற பெர்மிட்களில் வருபவர்கள் ஏஜென்ட்களிடம் முன்பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.

5)overtime : இது ரொம்ப முக்கியமான ஒன்று. ஏஜென்ட்களிடம் நாம் பணிபுரிய போகின்ற கம்பெனிகளில் over time இருக்கிறதா? என்று கேட்க வேண்டும்.சில கம்பெனிகளில் மாத சம்பளமாக தருவார்கள். அதாவது 8.00-5.00 மணிக்கு பிறகு பார்க்கும் வேலை overtime.அதற்குரிய சம்பளத்தை மாத சம்பளத்தில் சேர்த்து கொடுப்பார்கள். ஒரு சில கம்பெனிகளில் daily basics மூலம் over time க்கு சம்பளம் தருவார்கள்.அதனால் நாம் செல்லும் கம்பெனியில் overtime இருக்கிறதா? இல்லையா? என்பதை ஏஜென்ட்களிடம் கேட்டுத் தெரிந்துக் கொள்ளுங்கள்.

இப்போது புதிதாக இருக்கும் கம்பெனிகளில் 12 மணி நேர வேலை என்று கூறுகிறார்கள்.நீங்கள் செல்லவிற்கும் கம்பெனியில் 8 மணிநேர வேலை நேரம் இருந்தால் மட்டுமே over time பார்க்க முடியும்.12மணி நேர வேலையில் over time பார்க்க இயலாது.அதனால் ஏஜென்ட்களிடம் தெளிவாக கேட்டுக்கொள்ளுங்கள்.