தற்போது டெஸ்ட் அடிக்கலாமா? வேண்டாமா? சிங்கப்பூர் , இந்தியா சூழ்நிலை என்ன?

தற்போது டெஸ்ட் அடிக்கலாமா? வேண்டாமா? சிங்கப்பூர் , இந்தியா சூழ்நிலை என்ன?

சிங்கப்பூரில் ஒவ்வொரு வருடமும் விதிமுறைகள் மாறிக்கொண்டிருக்கிறது. அவ்வப்போது மாறுகிற மாற்றத்தால் அங்கு செயல்படும் கம்பெனிகள் ஒரு சில பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. அதில் முக்கியமாக கோட்டா பிரச்சனை. அதனால் அனைவருக்கும் வேலை கிடைப்பதில் சற்று கால தாமதம் ஆகிறது.இந்தியாவில் கோட்டா கிடைப்பதில்லை.பெரும்பாலான இன்ஸ்டிட்யூட் மூடப்பட்டு விட்டன.

சிங்கப்பூரில் வேறொரு பர்மிட்டில் டெஸ்ட் அடிக்க வேண்டுமெனில் கம்பெனி லெட்டர் கேட்கப்படுகிறது.அதனால் இங்கும்(இந்தியா),சிங்கப்பூரிலும் டெஸ்ட் அடிக்கும் சூழ்நிலை இல்லாமல் இருக்கிறது.தற்போது இந்த சூழல் தான் உள்ளது.முன்பு,மாதத்திற்கு ஆயிரம் பேர் வேலைகளுக்கு செல்லும் வாய்ப்பு இருந்தது. ஆனால்,இன்றைய நிலையில் 300 பேருக்கு மட்டுமே வேலை கிடைக்கும் நிலை உள்ளது.மீதம் உள்ளவர்களுக்கு சற்று கால தாமதம் ஆகிறது.முடிந்த அளவிற்கு நீங்கள் படித்ததற்க்கான வேலையை தேர்ந்தெடுங்கள்.

நீங்கள் சிங்கப்பூர் செல்ல வேண்டும் என்ற கனவிலோ,ஆர்வத்திலோ இருப்பவர்கள் தயவுசெய்து ஏஜென்ட்களிடம் அதிகமான அட்வான்ஸ் கொடுத்து ஏமாற வேண்டாம். ஏனெனில், அவர்கள் கூறிய வேலை இல்லாமல் போவதற்கும் வாய்ப்புண்டு . அல்லது சம்பளம் குறைவாக கிடைக்க கூட வாய்ப்புள்ளது.அங்குள்ள சூழ்நிலை நீங்கள் நினைத்தது போல் இல்லாமல் இருந்தால் நீங்க உங்களுடைய தாய் நாட்டிற்கே திரும்பி வரும் நிலை கூட ஏற்படலாம்.

சிங்கப்பூரில் டெஸ்ட் அடிப்பதற்கான சூழ்நிலை எப்பொழுது வேண்டுமானாலும் மாறலாம்.காரணம்,தற்போது டெஸ்ட் அடிப்பதற்கு அட்மிஷன் போட்டால் காத்திருக்கும் நேரம் (waiting time) ஒரு வருடம் ஆகலாம். தற்போதைக்கு டெஸ்ட் அடிப்பது என்பது சிறந்த வழி அல்ல.பொறுமையுடன் இருங்கள். “காலதாமதமாக கிடைக்கக்கூடிய அனைத்துமே உங்களின் வாழ்க்கைக்கு மிகுந்த பயனை அளிப்பதாக இருக்கும்…..”