சிங்கப்பூரில் ஜூலை மாதம் அமலுக்கு வரவுள்ள புதிய நடைமுறை!!

சிங்கப்பூரில் ஜூலை மாதம் அமலுக்கு வரவுள்ள புதிய நடைமுறை!!

மார்ச் 28ஆம் தேதி அன்று சிங்கப்பூர் தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதிகரித்து வரும் செயல்பாட்டுகள் மற்றும் மனிதவளச் செலவுகள் காரணத்தால் குடியிருப்பாளர்கள் பொது கழிவுகளை எடுப்பதற்கு அதிக கட்டணத்தை கட்ட வேண்டி வரும். இந்த நடைமுறை ஜூலை 1-ஆம் தேதி முதல் செயல்முறைக்கு வரும் என்றும் தெரிவித்தது.

மேலும் வீட்டு வசதி வாரியம் அடுக்கு மாடிக் குடியிருப்புகள் மற்றும் நிலம் இல்லாத தனியார் வீடுகளுக்கான மாதாந்திர குப்பை சேகரிப்பு கட்டணம் $9.81 டாலரில் இருந்து $10.20 ஆக அதிகரிக்கும்.

நிலம் உள்ள வீடுகளில் மாதாந்திர கட்டணம் $32.67 டாலரில் இருந்து $34 டாலர் அதிகரிக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாற்றி அமைக்கப்பட்ட கட்டணங்கள் சிங்கப்பூரின் அனைத்து கழிவு மேலாண்மை அமைப்பு ஒன்றாகவும் நிலையனானதாகவும் செயல்படுவதைக் குறிக்கிறது என்று NEA தெரிவித்தது.

ஆண்டுக்கு ஒருமுறை அல்லது இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை வீட்டு கழிவுகளை எடுப்பதற்கான கட்டணங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன.