சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியருக்கு சிறைத்தண்டனை விதிப்பு!! வெளிநாட்டவர்கள் மறந்து கூட இந்த தவறை செய்து விடாதீர்கள்!!

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியருக்கு சிறைத்தண்டனை விதிப்பு!! வெளிநாட்டவர்கள் மறந்து கூட இந்த தவறை செய்து விடாதீர்கள்!!

சிங்கப்பூரில் உரிமம் பெறாத கடனாளரின் சேவையை விளம்பரப்படுத்துவதற்காக இந்தோனேசியா பணிப்பெண் அவருடைய TIKTOK கணக்கை பயன்படுத்தியதால் 8 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பு மார்ச் 26 அன்று வழங்கப்பட்டது.

ஐடா யூலியாட்டி உரிமம் பெறாத கடனாளருக்கு உதவிய குற்றத்தை ஏற்றுக்கொண்டார், அதனால் அவருக்கு $30,000 அபராதம் விதித்துள்ளனர். அந்த தொகையை செலுத்த தவறினால் அவருக்கு சிறைத்தண்டனையும் அதற்கு பின்னால் 1 மாதம் செலவிட வேண்டும்.

ஐடா ஜூன் முதல் ஆகஸ்ட் மாதத்திற்குள் 20 முறை விளம்பரங்களை வெளியிட்டுள்ளார்.

Cashtank Financing Corporation நிறுவனத்திடமிருந்து $890 தொகையை கடன் வாங்கி உள்ளார். அந்த தொகையை அவர் செலுத்த தவறியுள்ளார்.

அந்நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் ஐடா வின் முதலாளியிடம் தெரிவித்து விடுவேன் என்று ஐடாவை மிரட்டியுள்ளார்.

சூரிய பிரகாஷ் என்ற துணை அரசு வழக்கறிஞர்,பணிப்பெண் tiktok இல் கடனுக்கான விளம்பரத்தை பார்த்ததாக கூறினார்.
அதில் அவள் கடன் எப்படி வாங்குவது என்ற இணைப்பை கிளிக் செய்ததாக கூறினார்.

அதில் சாம் என்பவரை பணி பெண் தொடர்பு கொண்டார்.அந்த நிறுவனம் காஷ்டங்கிலிருந்து வந்ததாகவும்,அது பிலிப்பைன்சில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் என்றும் கூறினார்.

சாமுவிடம் தனது பணி அனுமதி சீட்டின் ஸேராக்ஸ் ,அதனுடன் தனது முதலாளியின் தொடர்பு எண் போன்ற மற்ற விவரங்களையும் ஐடா கூறியுள்ளார்.

கேஷ்டாங்கில் இருந்து $445 கடன் வாங்கினார்.அதை இரண்டு மாதங்கள் கழித்து வட்டியாக செலுத்திய தொகையை வெளியிடப்படாத தொகையை செலுத்தியதாக கூறப்படுகிறது.

மீண்டும் அதே நிறுவனத்தில் $890 கடன் வாங்கியுள்ளார்.அதை திரும்ப செலுத்துவதில் அதிக இன்னல்களை மேற்கொண்டார்.

மற்றொரு கேஷ்டாங் ஊழியர் மீண்டும் ஐடாவை தொடர்பு கொண்டுள்ளார் .கடன் விவரங்களை tiktok இல் வெளியிடவில்லை என்றால், முதலாளியிடம் தெரிவித்து விடுவேன் என்று ஐடாவை மிரட்டியதாக கூறப்பட்டது.

ஐடா மீண்டும் மற்றொரு கணக்கை உருவாக்கியதோடு மட்டுமல்லாமல் அதன் விவரங்களை ஜானுடன் பகிர்ந்துள்ளார். அந்த கணக்கில் தெரியாத பெண்ணின் புகைப்படத்தை பயன்படுத்தி அதை whats up இல் சேர்த்துள்ளதாக கூறப்பட்டது.

இந்த வாட்ஸாப் லிங்க் ”கிரெடிட் 21” ஏஜென்சிக்குரியது என்று கூறப்படுகிறது.
ஜான் முன்பு அனுப்பிய பல விளம்பரங்களை ஐடா தனது tiktok கணக்கில் வெளியிட்டதாக தெரிவித்தது.
10 க்கும் அதிகமான tiktok கணக்குகளை போலீஸார் கண்டறிந்துள்ளதாகவும் தெரிவித்தது. ஐடாவின் குற்றம் நிரூபனமானதாலும் ,அவருடைய குற்றத்தை ஒப்புக்கொண்டதன் அடிப்படையிலும் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.