சிங்கப்பூர் இலவச வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூர் இலவச வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூர் வேலைக்கு செல்வது என்பது பலரது கனவு. அனைவருக்கும் அவர்களுடைய கனவு நினைவாகிறதா என்பது கேள்விக்குறியே!? சிங்கப்பூருக்கு பணம் செலுத்தி மட்டுமே செல்ல முடியுமா? ஒரு ரூபாய் கூட பணம் கட்டமால் சிங்கப்பூருக்கு செல்ல முடியுமா? என்ற கேள்வியும் பலரிடம் உள்ளது. இந்த கேள்விகளுக்கான பதிலை இப்பதிவில் விவரமாக தெளிவாக தெரிந்து கொள்வோம்.

சிங்கப்பூருக்கு செல்ல சுலபமான எளிமையான நான்கு வழிமுறைகள் உள்ளது. இந்த நான்கு வழிமுறைகளில் ஏதேனும் ஒரு வழிமுறையில் கண்டிப்பாக வேலை கிடைப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது.

இலவச வேலை வாய்ப்புக்கு முயற்சி செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் கவனத்தில் கொள்வது, உங்களுடைய வயது.20 முதல் 35 வயதிற்குள் இருப்பவர்கள் இலவச வேலை வாய்ப்புக்கு முயற்சி செய்வது நல்லது. ஏனென்றால்,பெரும்பாலான கம்பெனிகள் 35 வயதிற்குமேல் உள்ளவர்களை வேலைக்கு எடுப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை.அதனால் 35 வயதிற்குமேல் உள்ளவர்கள் இலவச வேலை வாய்ப்புக்கு முயற்சி செய்வதை தவிர்த்து விட்டு பணம் கட்டி சிங்கப்பூருக்கு செல்லும் வழிக்கு முயற்சி செய்யுங்கள்.

இரண்டாவதாக நீங்கள் கவனித்து கொள்வது,நீங்கள் இலவச வேலை வாய்ப்புக்கு முயற்சி செய்வதாக இருந்தால் அதற்கு முயற்சி செய்யக்கூடிய கால அவகாசத்தை நிர்ணயிக்க வேண்டும்.உதாரணமாக, நீங்கள் நிர்ணயித்த 6 மாதத்திற்குள் இலவச வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும். அதாவது உங்களுக்கு தெரிந்தவர் அல்லது ஏஜென்ட் மூலம் பணம் கட்டி சிங்கப்பூர் செல்வதற்கான முயற்சியை எடுக்க வேண்டும்.இந்த இரண்டும் மிக முக்கியானது.

எளிய நான்கு வழிமுறைகள் :

🔸 நண்பர்கள் மூலம் சிங்கப்பூர் வேலைக்கு முயற்சி செய்வது:

இந்த வழி மிகவும் சிறந்த வழி. உங்களுக்கு உதவி புரியும் நண்பர் இருந்தால், அவர் மூலம் சிங்கப்பூர் வேலைக்கு முயற்சி செய்யலாம். அவர் பணி புரியும் கம்பெனியில் ஏதேனும் வேலை வாய்ப்பு இருக்கிறதா என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.அவர் பணி புரியும் கம்பெனியில் வேலை வாய்ப்பு இருந்தால் உங்களுடைய ப்ரொபைல் அந்த வேலைக்கேற்ற தகுதி அனைத்தும் உங்களிடம் இருந்தால் நிச்சயமாக அந்த கம்பெனியில் இருந்து உங்களுக்கு ரெஸ்பான்ஸ் கிடைக்கும். உங்களுடைய நண்பர் பணம் கட்டி சிங்கப்பூருக்கு சென்றிருப்பார். அவரால் உங்களுக்கு அவர் பணி புரியும் கம்பெனியில் இலவசமாக வேலை வாங்கி தர முடியும். இந்த வழி மூலம் இலவச வேலை வாய்ப்பை பெறலாம்.

🔸 FREE JOB PORTAL :

இணையதள வழியில் சிங்கப்பூர் வேலை வாய்ப்பை தேடி அதற்கு விண்ணப்பிக்கலாம். ஒரு சில வேலைகளுக்கு Singpass id கேட்கப்படும். அந்த வேலைகளுக்கு நேரடியாக அப்ளை செய்ய முடியாது. நீங்கள் அப்ளை செய்த வேலைக்கான இன்டெர்வியூவில் செலக்ட் ஆகிய பின், ip வந்தவுடன் பணம் கட்ட சொன்னால் பணத்தை கட்டி விடாதீர்கள். ஏனென்றால் இதிலும் ஏமாற்றுபவர்கள் இருக்க தான் செய்வார்கள். அதனால் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் முயற்சி செய்யுங்கள். இதன் மூலம் இலவச வேலை வாய்ப்புக்கு முயற்சி செய்யலாம். எந்தெந்த இணைய தளத்தில் இலவச வாய்ப்பினை அப்ளை செய்யலாம் என்பதற்கான இணைய தளத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோ லிங்கை கிளிக் செய்து தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.👇👇

🔸 SEND TO EMAIL :

நீங்கள் வேலை வாய்ப்பு இணைய தளத்தில் தேடிய வேலை வாய்ப்பு தகவல்களை அடிப்படையாக கொண்டு முயற்சி செய்யலாம். அதாவது, நீங்கள் அப்ளை செய்ய வேண்டும் என்று நினைத்த வேலை வாய்ப்பு தகவலில் அதன் கம்பெனி பெயர் கொடுக்கப்பட்டிருக்கும்.கூகுளில் அந்த கம்பெனியின் தகவலை தேடுங்கள். அதைப் பற்றிய முழு விவரமும் அதில் கொடுக்கப்பட்டிருக்கும். அனைத்தையும் சரிபார்த்து விட்டு அதில் கொடுக்கப்பட்டுள்ள E-mail id க்கு உங்களுடைய ப்ரொபைலை அனுப்புங்கள். நீங்கள் Professional முறையில் அனுப்பினால் மிகவும் நல்லது. நீங்கள் நேரடியாக அவர்களின் E-mail id க்கு அனுப்பினால் அவர்களிடம் இருந்து நிச்சயமாக ரிப்ளை வருவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது.இதன் மூலமும் நீங்கள் முயற்சி செய்யலாம்.

🔸 எங்களிடம் முயற்சி செய்வது :

நமது “SGTAMILAN” இணைய தளத்தில் இலவச வேலை வாய்ப்புகளும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. நாங்கள் பதிவிட்ட ஏதேனும் இலவச வேலை வாய்ப்பிற்கான தகுதி உங்களிடம் இருந்தால் நீங்கள் முயற்சி செய்யலாம். உங்களிடம் அந்த வேலைக்கான தகுதி இருந்தால் நிச்சயமாக இலவச வேலை வாய்ப்பு கிடைப்பதற்கு நிறைய வாய்ப்புண்டு.

நீங்கள் எங்களின் Telegram id : https://t.me/tamilansg

இணைந்திருங்கள். உங்களுக்கான வேலை நிச்சயமாக ஒரு நாள் கிடைக்கும்.

இப்பதிவைப் பற்றி மேலும் விவரமாக தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.👇👇