பனிச்சறுக்குக்கு பிரபலமான டட்ரா மலைகளுக்கு அருகே உள்ள நகரத்தில் மக்கள்களை தாக்கி வரும் கரடி!! அச்சத்தில் மக்கள்!!
ஸ்லோவாக்கியாவில் உள்ள ஒரு நகரத்தில் கரடி தாக்கியதில் 10 வயது குழந்தை உட்பட 5 பேர் காயமடைந்தனர்.
பனிச்சறுக்குக்கு பிரபலமான டட்ரா மலைகளுக்கு அருகிலுள்ள லிப்டோவ்ஸ்கி மிகுலாஸ் என்ற நகரத்தில் இது நடந்தது.
தாக்குதலுக்குப் பிறகு கரடி காட்டுக்குள் தப்பிச் சென்றதாக நகரத்தின் செய்தித் தொடர்பாளர் விக்டோரியா கேப்சிகோவா தெரிவித்தார்.
குறிப்பாக இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் கரடி வெளியே வருவதாகவும் ,குடியிருப்பாளர்களை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
வேட்டைக்காரர்கள்,போலீஸ் அதிகாரிகள் மற்றும் வனவிலங்கு நிபுணர்கள் அடங்கிய ஆறு குழுக்கள் கரடியை தீவிரமாக தேடி வருகின்றனர்.மேலும் ட்ரோன்கள் மற்றும் பிற கருவிகளைப் பயன்படுத்தி அதைக் கண்டுபிடிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
அப்பகுதியில் உள்ள அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய அயராது உழைத்து வருகின்றனர் என்று தெரிவித்தது.