Latest Sports News Online

சிங்கப்பூரின் பொங்கல் திருநாள் கொண்டாட்டம் கோலாகலமாக ஆரம்பிக்கபட உள்ளது !

சிங்கப்பூரில் கோலாகலமாக பொங்கல் திருநாள் கொண்டாட்டம் ஆரம்பமாகிறது.சிங்கப்பூரில் லிஷா எனும் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள், மரபுடமைச் சங்கம் அதைப் பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளனர். பொங்கல் திருநாளை லிட்டில் இந்தியா கலைக்கட்டி காணப்படுகிறது. அழகிய பானைகள்,கண்ணை கவரும் அளவிற்கு வண்ணவண்ண அலங்காரங்கள் என்று கோலாகலமாக காணப்படுகிறது.

“தமிழர்களின் கிராமியக் கலைகளை மையமாக கொண்டுள்ளதாக´´ லிஷா ஒருங்கிணைப்பாளருமான கண்ணன் சேஷாத்ரி கூறிகிறார்.அதனால் இந்த ஒரு வார நிகழ்ச்சிகளில் வேறு எதுவுமின்றி தமிழர்களின் பாரம்பரிய கலைகளை மட்டுமே மையமாக்கப்பட்டு அமைந்து இருப்பதாக அவர் கூறினார். நிகழ்ச்சிகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கவரும் வகையில் நிகழ்ச்சி அமைய இருப்பதாக கூறுகிறார்கள்.

எல்லா இனத்தினருக்காகவும் MASS PONGAL என்ற அங்கத்தை அமைக்க போவதாக கூறியுள்ளனர். இதற்கு முன் MASS PONGAL அங்கத்தில் பெரும்பாலும் 30 முதல் 50 பொங்கல் பானைகளைக் கொண்டு செய்ததாக கூறினார். ஆனால், இம்முறை இந்தியர் சங்கத்துடன் இணைந்து செய்வதால் பெருமளவில் செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்துள்ளனர். கோவிட் பிறகு செய்வதாலும் 100 பொங்கல் பானைகளை வைத்து செய்யவிருப்பதாக ஏற்பாட்டுக் குழுத்தலைவரான பழனியப்பன் அருணாசலம் கூறினார்.இது MASS PONGAL என்பதால் பல இனத்தவரும் கலந்துக் கொள்ளலாம்.

இந்த ஏற்பாட்டில் சிறு பிள்ளைகளின் பங்களிப்பும் உள்ளதாக கூறுகிறார்கள்.நமது கிராமியக் கலைகளை நடனம் மூலமாக பொங்கல் உணர்வை நாங்கள் மக்களுக்கு இன்னும் சுலபமாக கொண்டு சேர்க்கிறோம் என்று மகூலம் கலைக்கூடம், மீனாலோசனி கூறுகிறார். வழக்கமாக பொங்கல் பண்டிகையை வரும்போது சுற்றுலா பயணிகளுக்கு நல்விருந்தாக அமையும் என்றும் கூறுகிறார்கள். மற்ற இனத்தவரும் பொங்கல் பண்டிகையைப் பற்றி தெரிந்துக் கொள்வதர்காக ஒளியூட்டு செய்யப்படுவதாக கூறுகிறார்கள்.