சிங்கப்பூரில் திறந்தவெளியில் பணிபுரியும் ஊழியர்கள் உஷார்... இந்த ஆண்டு விளைவுகள் அதிகமாக இருக்கும் என அமெரிக்க நிறுவனம் எச்சரிக்கை!!
உலகின் வெப்பநிலை ஆண்டிற்கு ஆண்டு உயர்ந்து வரும் செய்திகளை நாம் கேள்விப்பட்ட வண்ணம் தான் உள்ளோம். அறிவியல் ஆய்வாளர்கள் பலரும் வெப்பநிலை உயர்வை பற்றிய பல்வேறு அதிர்ச்சியூட்டும் அறிக்கைகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வெயில் காலங்களில் கட்டுமானத்துறை போன்ற வெயிலில் திறந்தவெளியில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு வெயிலால் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக அமெரிக்கா ஆய்வு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
இதன்படி வெப்பநிலையானது கடந்த ஆண்டினை விட மேலும் ஒரு டிகிரி செல்சியஸ் அது அதிகரிக்க கூடும் என அமெரிக்க நிறுவனம் கண்டறிந்துள்ளது. எனவே உலகம் முழுவதிலும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான ஊழியர்கள் மண்டல பகுதிகளில் வசிப்பதால், பாதுகாப்பு வரம்புகள் அதிகப்படுத்த வேண்டும் என அறைகூவல் விடுத்துள்ளது.
பெரும்பாலும் கட்டுமான துறையில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களது உடல் நலனை கருத்தில் கொள்ளாமல் அதிக வெப்பத்தில் வேலை புரிவதால் வெயில் காலத்தில் பல்வேறு பாதிப்புகளுக்கு உட்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வெயில் காலங்களில் ஊழியர்கள் தங்களது உடல் நலனை கருத்தில் கொண்டு உடல் சூட்டில் இருந்து தங்களை காத்துக் கொள்ள வேண்டும். வெயில் காலங்களில் அதிகப்படியாக தண்ணீர் அருந்த வேண்டும்.
மனித நல அமைச்சகத்தின் அறிவுரையை கருத்தில் கொண்டு வெயில் காலங்களில், பகல் நேரங்களில் திறந்தவெளியில் பணிபுரிவதை தவிர்க்கலாம். ஆரோக்கியமான உடல் அனைத்திற்கும் ஆதாரம் என்பதை புரிந்து செயல்பட வேண்டும்.