சிங்கப்பூரின் சோவா சூ காங்கில் தலைக் குப்பற கவிழ்ந்த கார்!!

சிங்கப்பூரின் சோவா சூ காங்கில் தலைக் குப்பற கவிழ்ந்த கார்!!

சிங்கப்பூரின் சோவா சூ காங்கில் கார் ஒன்று தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவம் மார்ச் 9ஆம் தேதி அன்று நடந்தது.

இந்த விபத்து குறித்து நள்ளிரவு 12.45 மணியளவில் காவல்துறையினர் மற்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த விபத்தில் காரில் இருந்த 47 வயது பெண் ஒருவர் காயமடைந்தார்.

காயமடைந்த அந்த பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.