68 குழந்தைகளை கொன்ற இருமல் மருந்து!! தயாரிப்பு நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு!!

68 குழந்தைகளை கொன்ற இருமல் மருந்து!! தயாரிப்பு நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு!!

உஸ்பெகிஸ்தானில், இந்தியாவின் மரியன் பயோடெக் நிறுவனம் தயாரித்த நச்சுத்தன்மை வாய்ந்த இருமல் மருந்தை உட்கொண்டதால் 68 குழந்தைகள் உயிரிழந்தனர்.

மேலும் நான்கு குழந்தைகள் ஊனமுற்றனர் மற்றும் எட்டு குழந்தைகள் பாதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்தது.

இது தொடர்பாக, ஒரு இந்தியர் உட்பட 23 பேருக்கு 2 முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த நிறுவனம் தயாரித்த மருந்துகளை விற்பனை செய்த ஒரு மெடிக்கல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருக்கும் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட அனைத்து குழந்தைகளின் குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.

மேலும் ஏழு குற்றவாளிகளிடமிருந்து இழப்பீட்டுத் தொகை வசூலிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.