சிங்கப்பூரில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட போலி பொருட்கள்!!
சிங்கப்பூரில் போலியான பொருட்களை விற்ற 55 வயதான நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஜூரோங் கிழக்கில் உள்ள சேமிப்புக் கிடங்கு ஒன்றில் சோதனை நடத்தியதில் 25,000-க்கும் மேற்பட்ட பொருட்களை அவர்கள் பறிமுதல் செய்தனர்.
அவற்றின் மதிப்பு சுமார் $2 மில்லியன் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் போலியான பொருட்களை விற்பனை செய்வது கடுமையான குற்றம் என்று அவர்கள் கூறினர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, $100,000 வரை அபராதம் தீர்ப்பு வழங்கப்படலாம் .அல்லது இவ்விரண்டுமே விதிக்கப்படலாம்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.