புதுக்கோட்டையில் திருவப்பூர் கவிநாடு திடலில் நடைபெற உள்ள மாபெரும் ஜல்லிக்கட்டு விழா!!
திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல்விழா_மற்றும் ஜல்லிக்கட்டு.
நாளை மறுநாள் 25ந்தேதி_நடக்கிறது
ஏற்பாடுகள் தீவிரம்…
புதுக்கோட்டை அருகே உள்ள திருவப்பூரில் மிகவும் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி தேரோட்ட்டம் பூச்சொரிதல் விழா, காப்புகட்டுதலுடன் தொடங்கி நடைபெறுவது வழக்கம்.
வழக்கம்போல் இந்த ஆண்டும் வருகிற 25ந் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற உள்ளது. முன்னதாக பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு அன்று காலை 9 மணிக்கு திருவப்பூர் கவிநாடு திடலில் மாபெரும் ஜல்லிக்கட்டு விழா நடைபெற உள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் புதுக்கோட்டை,சிவகங்கை,ராமநாதபுரம், தஞ்சாவூர்,திருச்சி,மணப்பாறை,மதுரை ஆகிய பகுதிகளில் இருந்து 1000க்கு மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் 500 க்கும் மேற்பட்ட மாடு பிடி வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
ஜல்லிக்கட்டு விழாவிற்கான ஏற்பாடுகளை திருவப்பூர் கவிநாடு ஊரார்கள் பொதுமக்கள் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர் .இதே போல் காலையில் திருவப்பூர் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கோவில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு விரதம் இருந்து கோவிலுக்கு ஊர்வலமாக பால்குடம் எடுத்து வந்து, கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்த உள்ளனர்.
வருகின்ற 3.3. 24 ந்தேதி மாசிபெருந்திருவிழா காப்பு கட்டப்பட்டு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது .இதைத்தொடர்ந்து வருகிற மார்ச் மாதம் 3-ந் தேதி முதல் விழா நாட்களில் தினமும் பல்வேறு மண்டகப்படிதாரர்களால் திருவப்பூர் முத்துமாரியம்மன் காலையிலும், மாலையிலும் திருவப்பூர் காட்டுமாரியம்மன் கோவிலில் எழுந்தருளி புஷ்பமின் அலங்காரத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலுக்கு வீதிஉலா நடைபெற உள்ளது.
விழாவின் முக்கிய நாளான வருகிற மார்ச் மாதம் 11-ந் தேதி 9-வது நாள் விழாவை முன்னிட்டு மாலை 5 மணியளவில் தேரோட்டம் நடைபெற உள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்க உள்ளனர். மாசி தேரோட்ட திருவிழா வருகிற 19-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஊரார்கள் கிராம பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.