சிங்கப்பூரில் இன்று முதல் ஒருங்கிணைந்த பரிசோதனை தடுப்பூசி நிலையங்களில் எல்லா வயதினரும் முன் பதிவு இன்றி தடுப்பூசி போட்டுகொள்ளலாம். பிள்ளைகளுக்கான தடுப்பூசி நிலையங்களுக்கும் அது பொருந்தும்.இதற்கு முன் அத்தகைய தடுப்பூசி நிலையங்களில் ஐம்பது வயதுக்கு மேற்பட்டோர்கள் மட்டுமே முன்பதிவின்றி தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
இனி திங்கட்கிழமைகளிருந்து சனிக்கிழமைகள் வரை தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் நேரடியாக நிலையங்களுக்கு செல்ல முடியும்.எண்பது வயதுக்கு ஏற்பட்ட மூத்தோர் பலதுறை மருந்தகளிலும், பொது சுகாதார ஆய்வு நிலை மருந்தகளிலும் முன் பதிவின்றி தடுப்பூசி போட்டுகொள்ளலாம்.
அமோக்கியோ, புக்கிட் மேரா ஆகியவற்றில் ஒருங்கிணைந்த பரிசோதனை நிலையங்களில் 6 மாதத்திலிருந்து 4 வயது வரையிலான பிள்ளைகளுக்கு Pfizer தடுப்பூசிகள் அறிமுகம் காணும்.