உஷார்!! மக்களே!! உஷார்!! இந்த பதிவை மறக்காமல் படியுங்கள்!!

உஷார்!! மக்களே!! உஷார்!! இந்த பதிவை மறக்காமல் படியுங்கள்!!

சிங்கப்பூரில் வேலை தொடர்பான மோசடிகளில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை 461 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் பாதிக்கப்பட்டவர்கள் குறைந்தது $6.8 மில்லியன் இழந்துள்ளதாக அவர்கள் கூறினர்.

Whatsapp மற்றும் Telegram மூலம் வேலை வாய்ப்புகள் வழங்குவதாக கூறி மோசடிக்காரர்கள் பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு சில எளிய பணிகள் வழங்கப்படும்.

அதன் மூலம் அவர்கள் அதிகமாக சம்பாதிக்கலாம் என்று அவர்களை நம்ப வைத்து ஒரு பெரிய தொகையை செலுத்த அறிவுறுத்துவார்கள்.

பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது wallet-ல் உள்ள பணத்தை எடுக்க முடியாத போதுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அவர்கள் உணர்வார்கள்.

எனவே பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினர்.

மேலும் பாதிக்கப்பட்டவர்கள் அதிகாரிகள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் மோசடிகள் குறித்து தெரிவிக்குமாறு காவல்துறையினர் கேட்டுக் கொண்டனர்.