ஆஸ்திரேலியாவில் மோசமான வானிலை : மின்னல் தாக்கியதில் ஏற்பட்ட காட்டுத்தீ!!
ஆஸ்திரேலியாவில் பிப்ரவரி 13ஆம் தேதி அன்று கடுமையான புயல் வீசியது மற்றும் கனமழை பெய்தது.
மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது.
புயல் காரணமாக ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி 50 வயதான நபர் ஒருவர் உயிரிழந்தார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.
மின்கம்பங்கள் மற்றும் கட்டிடங்கள் பல சேதம் அடைந்தன.
பல வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடுமையான புயல் காரணமாக ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டது.
மேலும் டஜன் கணக்கான பள்ளிகள் மற்றும் குழந்தை பராமரிப்பு மையங்கள் கடுமையான சூழ்நிலை காரணமாக மூடப்பட்டது.
மின்னல் தாக்கியதால் காட்டுத் தீ பரவியது.
காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
மேலும் ஐந்து தீயணைப்பு வீரர்களுக்கு சிறு தீக்காயங்கள் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆஸ்திரேலியாவின் வானிலை ஆய்வு மையம், நிலைமை இன்னும் மோசமடையக்கூடும் என்று எச்சரித்தது.