திருவண்ணாமலையில் பக்தி பரவசத்தில் பாடல் பாடிய 90’S பிரபல நடிகை..!!

திருவண்ணாமலையில் பக்தி பரவசத்தில் பாடல் பாடிய 90'S பிரபல நடிகை..!!

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள ரமண மகரிஷி ஆசிரமத்தில் ஸ்ரீ ரமண மகரிஷியின் 75வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் வழிபாடு நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட நடிகை சுகன்யா பக்திப் பரவசத்தில் ரமணர் பாடலைப் பாடினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை சுகன்யா 90களின் முன்னணி நடிகைகளில் ஒருவர். பரதநாட்டியக் கலைஞரான சுகன்யா, நடிப்பைத் தாண்டி பரதநாட்டியம் மற்றும் இசையின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

பாரதிராஜா இயக்கிய புது நெல்லு புது நாடு படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். நெப்போலியன் மற்றும் பொன்வண்ணன் நடித்துள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களும் ஹிட் அடித்தது. குறிப்பாகக் கருத்த மச்சான் பாடல் இன்றுவரை ட்ரெண்டிங்கில் உள்ளது.

சுகன்யாவின் முதல் படமே மெகா ஹிட் அடித்ததை தொடர்ந்து, அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் நடித்து, அவரை முன்னணி நடிகையாக மாற்றினார்.

மேலும் ரஜினி,முத்து படத்தில் மீனா கதாபாத்திரத்தில் சுகன்யா நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளாராம்.மேலும் சுகன்யாவின் கால்ஷீட்டிற்காக படக்குழு ஒரு மாதத்திற்கும் மேலாக காத்திருந்தது.ஆனால், அந்த நேரத்தில், சுகன்யா மிகவும் பிஸியாக இருந்ததாலும், கால்ஷீட் தாமதமாகி வந்ததாலும் மீனா அந்த வேடத்தில் நடித்ததாக தமிழா தமிழா பாண்டியன் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.

2002 ஆம் ஆண்டு, சுகன்யா ஸ்ரீதர் ராஜகோபால் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் குடியேறினார். ஆனால், திருமணமான ஒரு வருடத்திற்குள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பி விவாகரத்து பெற்றனர்.

பின்னர் எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த சுகன்யா சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்தம் தொடரின் மூலம் கம்பேக் கொடுத்தார்.எஸ்.வி. சேகர் இயக்கிய ‘கிருஷ்ண கிருஷ்ணா’ படத்தில் ஒரு பாடலைப் பாடியுள்ளார். மேலும் மணிரத்னத்தின் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில், திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள ரமண மகரிஷி ஆசிரமத்தில் நடைபெற்ற ஸ்ரீ ரமண மகரிஷியின் 75வது ஆண்டு வழிபாட்டில் நடிகை சுகன்யா கலந்து கொண்டு, அந்த நிகழ்வில் மிகுந்த பக்தியுடன் ரமணர் பாடலைப் பாடினார்.
இந்த வீடியோக்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது.

Follow us on : click here 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan