சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட உள்ளது.சுமார் 8 மாத போனஸ் தகுதி பெறும் ஊழியர்களில் சிலருக்கு வழங்கப்பட உள்ளதாக நிறுவனத்தின் பேச்சாளர் கூறியுள்ளார்.
இதுவரை இல்லாத அளவில் அதில் 6.65 மாத லாபத்தைப் பகிரும் போனசும்,1.5 மாத நல்லெண்ண போனசும் அடங்கும்.
கடந்த நிதியாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 2.2 பில்லியன் வெள்ளி.
சுமார் 962 மில்லியன் வெள்ளி அதற்கு முந்தைய ஆண்டில் நட்டமாக பதிவானது.
இந்த போனஸ் ஊழியர்களின் அர்ப்பணிப்பு,கடின உழைப்பு, தியாகம் ஆகியவற்றை அங்கீகரிப்பதற்காக வழங்கப்படுவதாக நிறுவனம் குறிப்பிட்டது.
நிறுவனத்தின் பல ஊழியர்களின் சம்பளம் கிருமி பரவல் காலகட்டத்தில் குறைக்கப்பட்டது.
சுமார் 24,000 பேர் தற்போது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்தில் வேலை செய்து வருகின்றனர்.