விமான விபத்தில் இரண்டு கைக்குழந்தைகள் உட்பட 72 பேர் உயிரிழந்த விவகாரம்!! மனித தவறால் ஏற்பட்டதா?

இந்த ஆண்டு ஜனவரி மாதம் நேபாளத்தின் பொக்காரா நகரத்தில் Yeti ஏர்லைன்ஸின் விமானம் ஒன்று தரை இறங்குவதற்கு முன் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் விமானத்தில் இருந்த இரண்டு கைக்குழந்தைகள் உட்பட 72 பேரும் உயிரிழந்தனர்.

நேபாளத்தில் 30 ஆண்டுகளில் நடந்த மோசமான விமான விபத்துகளில் இதுவும் ஒன்றாகும்.

விமானிகள் தவறான லீவர்களை பயன்படுத்தியதே இந்த விபத்துக்கு காரணம் என்று அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு தெரிவித்தது.

மேலும் விமானிகளுக்கு போதிய விழிப்புணர்வு மற்றும் பயிற்சி இல்லை என்று அது கூறியது.