சிங்கப்பூரில் கடந்த செவ்வாய்க்கிழமை சட்டவிரோதமாக மின்சிகரெட்டுகள் விற்கப்படுவதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.
Montreal Link பிளாக் 592 இல் உள்ள அடுக்குமாடி கார் நிறுத்துமிடத்தில் சட்டவிரோதமாக விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது.
இதனையடுத்து மண்டாய் கிடங்கில் ஒன்றில் கடந்த 29-ஆம் தேதி புதன்கிழமை அன்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது.அதில் 85,000 க்கும் அதிகமான சிகரெட்டுகளும், அதற்கு தொடர்புடைய பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனை சுகாதார அறிவியல் ஆணையம் கூறியது.
இதுவரை இல்லாத அளவில் மின் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறியது.
சோதனையில் 6 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டனர். அவர்கள் 22 வயதுக்கும் 27 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடையவர்கள்.
ஆணையம் மண்டாய் கிடங்கில் மேல்விசாரணையில் கிடைத்த தகவலைக் கொண்டு சோதனை நடத்தியது.
சோதனை நடவடிக்கை 72 மணி நேரம் நீடித்தது. அதில் சம்பந்தப்பட்ட ஒரு விநியோகத் தொடர் முறியடிக்கப்பட்டதாகவும் தெரிவித்தது.
20 வயதுக்கும் 33 வயதுக்கும் இடைப்பட்ட 5 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டனர்.
2021-ஆம் ஆண்டில் அதிகமான மின் சிகரெட்டுகளும், அதற்குத் தொடர்புடைய பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. அதன் மதிப்பு கிட்டத்தட்ட 2.2 மில்லியன் வெள்ளி.