6 வயது சிறுவன் என்றும் பாராமல் 26 முறை கத்தியால் குத்தி கொன்ற 71 வயது முதியவர்…….

அமெரிக்காவை சேர்ந்த 71 வயதான நபர் ஒருவர் 6 வயது இஸ்லாமிய சிறுவனை 26 முறை கத்தியால் குத்தி கொன்றதற்காகவும், அச்சிறுவனின் தாயை காயப்படுத்தியதற்காகவும் கைது செய்யப்பட்டார்.

இச்சம்பவம் சனிக்கிழமை அன்று சிகாகோவில் இருந்து தென்மேற்கே 40 மைல் தொலைவில் உள்ள பிளைன்ஃபீல்ட் டவுன்ஷிப்பில் நேர்ந்தது.

அவர்களது மதத்தை குறி வைத்து இந்த தாக்குதல் நடந்ததாக அதிகாரிகள் மற்றும் இஸ்லாமிய உரிமை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் பாலஸ்தீனிய பகுதியை சேர்ந்த முஸ்லிம்கள் என்றும் அமெரிக்க ஜனாதிபதி கூறினார்.

மேலும் அமெரிக்காவில் இது போன்ற கொடூரமான வெறுப்பு செயல்களுக்கு இடமில்லை என்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இதுபோன்ற சூழலில், சர்வதேச காவல்துறை தலைவர்கள் சங்கத்தை விழிப்புடன் இருக்குமாறு FBI இயக்குனர் எச்சரித்தார்.