தென்கொரியா பண்ணையில் பரிதாபமாக இறந்து கிடந்த 63 கால்நடைகள்…!!!

தென்கொரியா பண்ணையில் பரிதாபமாக இறந்து கிடந்த 63 கால்நடைகள்...!!!

தென் கொரியாவில் உள்ள ஒரு பண்ணையில் 63 கால்நடைகள் பட்டினியால் இறந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

சௌத் ஜுல்லா மாகாணத்தில் உள்ள ஒரு பண்ணையில் சில விலங்குகள் இறந்து கிடப்பதாக உள்ளூர்வாசி ஒருவர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

பண்ணையில் இருந்த 67 விலங்குகளில் 63 விலங்குகள் இறந்துவிட்டதை அதிகாரிகள் உறுதி செய்தனர்.

பல்வேறு பிரச்சனைகள் காரணமாக பண்ணையை சரிவர பராமரிக்க முடியவில்லை என்று உரிமையாளர் கூறியதாக செய்தி வெளியானது.

விலங்குகள் உண்மையில் பட்டினியால் வாடி இறந்திருந்தால் உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம்.

நோய் அல்லது காயத்திற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர். விலங்குகள் மிகவும் மெலிந்து காணப்பட்டுள்ளன.

பண்ணை விலங்குகளின் இறப்புக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.