இயங்கி கொண்டிருந்த வாஷிங் மெஷினில் விழுந்த 6 வயது சிறுவனுக்கு நேர்ந்த துயரம்…..

மலேசியாவில் உள்ள பெராக் மாநிலத்தில் Autism பாதிக்கப்பட்ட 6 வயது சிறுவன் அக்டோபர் 16-ஆம் தேதி திங்கட்கிழமை அன்று காலை வாஷிங் மெஷினில் சுயநினைவின்றி மயங்கி கிடந்தான்.

மயங்கி கிடந்த சிறுவனை குடும்பத்தார் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

காலை சுமார் 11 மணியளவில் சிறுவன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

காலை 9:30 மணியளவில், வீட்டில் இருந்த அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஓடிக்கொண்டிருந்த வாஷிங் மெஷின் மீது சிறுவன் ஏறியதாக நம்பப்படுகிறது.

விழுந்த அதிர்ச்சியில் தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளது.அதுவே சிறுவனின் மரணத்திற்கு காரணம் என்றும் பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.

Ipoh மாவட்ட காவல்துறை தலைவர் Yahaya Hassan, இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாக கூறினார்.