போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட 16 வயது சிறுமி உட்பட 54 பேர் கைது..!!

போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட 16 வயது சிறுமி உட்பட 54 பேர் கைது..!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் நடத்திய அதிரடி சோதனையில் போதை பொருள் விற்பனையாளர்கள் பிடிபட்டுள்ளனர்.

சோதனையில் போதைப்பொருள் விற்பனையாளர்கள் என நம்பப்படும் 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதில் தொடர்புடைய சிங்கப்பூரரான 16 வயது சிறுமியும் கைது செய்யப்பட்டார்.

இம்மாதம் 24ஆம் தேதி தொடங்கிய அதிரடி சோதனை ஆனது நேற்றுடன் (நவம்பர் 29) முடிவடைந்தது.

சோதனையில் சுமார் 2,430 கிராம் ஹெராயின்,64 கிராம் ஐஸ்,723 கிராம் கஞ்சா,9 கிராம் கெட்டமைன்,38 எக்ஸ்டஸி மாத்திரைகள்,94 எரிமின்-5 மாத்திரைகள்,2,034 ‘டவோன் லியர்’ மாத்திரைகள் போன்ற போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு சுமார் 286,000 வெள்ளி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்றைய (நவம்பர் 29) சோதனையின் போது, ​60 வயது முதியவர் ஒருவர் வீட்டில் கத்தியை ஏந்திக்கொண்டு அதிகாரிகளை எதிர்கொண்டார்.

அதிகாரிகள் விரைந்து வந்து அந்த நபரை அடக்கினர்.

அந்த நபர் கதவை திறக்க மறுத்ததால், அதிகாரிகள் வலுக்கட்டாயமாக வீட்டிற்குள் நுழைந்தனர்.

அவரிடமிருந்து சுமார் 2,395 கிராம் ஹெராயின், 722 கிராம் கஞ்சா,25 கிராம் ஐஸ்,44 எரிமின்-5 மாத்திரைகள், 2 எக்ஸ்டஸி மாத்திரைகள் போன்றவை கைப்பற்றப்பட்டன.

அவற்றின் மதிப்பு சுமார் 273,000 வெள்ளி இருக்கும் என்று கூறப்படுகிறது.

புக்கிட் பாத்தோக், ஹவ்காங், மார்சிலிங், குயின்ஸ்டவுன் மற்றும் யிஷுன் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பல போதைப்பொருள் வியாபாரிகள் பிடிபட்டனர்.

போதை பொருள் விற்பதும், கடத்தப்படுவதும் கடுமையான குற்றமாக கருதப்படுவதால் பிடிபட்டவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

Follow us on : click here ⬇️