தீவிரவாத கருத்துகளை பரப்புவதை நோக்கமாகக் கொண்ட 50 இணையதளங்கள் முடக்கம்…!!!

தீவிரவாத கருத்துகளை பரப்புவதை நோக்கமாகக் கொண்ட 50 இணையதளங்கள் முடக்கம்...!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தீவிரவாதக் கருத்துகளைக் கொண்ட 50க்கும் மேற்பட்ட இணையதளங்களை சிங்கப்பூர் கண்டறிந்து தடை செய்துள்ளது என்று உள்துறை மற்றும் சட்ட அமைச்சர் திரு.சண்முகம் தெரிவித்தார்.

இருப்பினும், இதுபோன்ற அனைத்து இணையதளங்களையும் தடை செய்வது எளிதான காரியம் இல்லை என்று கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசல் புவாவின் கேள்விக்கு எழுத்து மூலம் அமைச்சர் பதிலளித்தார்.

தீவிரவாதக் கருத்துக்கள் கொண்ட இணையதளங்கள் உருவாக்கப்படுவதை திரு.சண்முகம் சுட்டிக்காட்டினார்.

தீய செயல்களில் ஈடுபடுபவர்கள் கண்டறியப்பட்டு தடை செய்யப்படுவதை தவிர்க்கும் வகையில் பல்வேறு வழிகளை பயன்படுத்தி கருத்துக்களை பரப்பி வருகின்றனர் என்றார்.

தடை செய்யப்பட்டாலும் அதை பயன்படுத்துவது குறித்து சிலர் அறிந்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது முக்கியம் எனத் தெரிவித்த அமைச்சர், தீவிரவாத சிந்தனைகளை முறியடிக்கும் பொறுப்பு அவர்களுக்கும் உள்ளது என்றார்.