குழந்தைகளுக்கு மறக்க முடியாத அனுபவத்தை தரும் இலங்கையின் 5 முக்கிய இடங்கள்...!!!

உங்கள் குழந்தைகளுக்கு ஆண்டு விடுமுறை வந்து விட்டதா..?? சுற்றுலா செல்வதற்கு குழந்தைகளுக்கு சிறந்த இடத்தை தேடுகிறீர்கள் என்றால் இலங்கை அதற்கான ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். குறைந்த செலவில் நிறைய அனுபவங்களை உங்கள் குழந்தைகளுக்கு கற்றுத் தரும் இடமாக இலங்கை விளங்குகிறது.
இலங்கையில் வனவிலங்குகள் முதல் கலாச்சாரம் மற்றும் கடற்கரைகள் வரை ரசிப்பதற்கு எண்ணற்ற இடங்கள் உள்ளது.
இலங்கையில் உள்ள கடற்கரைகள், கோயில்கள் மற்றும் தேயிலைத் தோட்டங்கள் என அனைத்தும் பெரியவர்களுக்கும் மட்டுமல்ல குழந்தைகளுக்கும் ஒரு நம்ப முடியாத அனுபவத்தை அளிக்கிறது. இலங்கையில் இருக்கும் முக்கியமான சுற்றுலா தளம் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க…
யாலா தேசிய பூங்கா
யாலா தேசிய பூங்காவில் தேயிலைத் தோட்டங்கள் வழியாக அழகிய ரயில் பயணம் மேற்கொள்வது ஒரு சிறந்த அனுபவத்தை தரும். மேலும் அங்குள்ள வனவிலங்குகளையும் குழந்தைகள் கண்டு ரசிக்கலாம்.
யாலா தேசிய பூங்காவில் மினி சஃபாரி மேற்கொண்டு அங்குள்ள வனவிலங்குகளை பார்ப்பது குழந்தைகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும்.
அங்கு மயில்கள்,குரங்குகள்,கரடிகள் என எண்ணற்ற விலங்குகள் உள்ளன. நாம் செல்லும் நேரத்தில் அதிர்ஷ்டவசமாக சிறுத்தை அங்கு இருந்தால் அது சூரியனில் ஓய்வெடுப்பதையும், பாறைகளின் மேல் உயரமாக அமர்ந்திருப்பதைக் காணலாம்.
மலைகள் வழியாக ஐகானிக் ப்ளூ ரயில் பயணம்
கண்டியிலிருந்து எல்லா வரையிலான அழகிய ரயில் பயணம் உங்களுக்கு நிச்சயம் மறக்க முடியாத அனுபவத்தை தரும். ரயில் பயணத்தில் வண்ணமயமான கிராமங்கள், பசுமையான தேயிலைத் தோட்டங்கள் மற்றும் மூடுபனி நிறைந்த மலைகள் என கண்களுக்கு குளிர்ச்சியான ஒரு வேடிக்கையான கனவுப் பயணத்தை உருவாக்குகின்றன.
பயணத்தின் மிகவும் முக்கியமான மற்றும் அழகான பகுதி ஹட்டன் மற்றும் ஹப்புத்தளை நிலையங்களுக்கு இடையில் உள்ளது.
பென்டோட்டாவில் உள்ள கடற்கரை
இலங்கையின் கடற்கரைகள் அஞ்சல் அட்டைகளுக்கு ஏற்றவை.ஆனால் பென்டோட்டா கடற்கரை குழந்தைகளுக்கு ஏற்ற இடமாக உள்ளது. அங்கு குழந்தைகள் மணலில் வீடு செய்து விளையாடவும்,கடல் ஓடுகளை சேகரிக்கவும் ஏற்ற இடமாக இருக்கும். குழந்தைகளை மென்மையான அலைகளில் விளையாட விடலாம். மேலும் அங்கு வாழைப்பழ படகு சவாரி அல்லது ஸ்நோர்கெல்லிங் போன்றவற்றை அனுபவிக்கலாம். குழந்தைகளை விளையாடுவதை பார்த்துக் கொண்டே பெற்றோர்கள் கையில் ஒரு இளநீருடன் ஓய்வெடுக்கலாம்.
சிகிரியா பாறை கோட்டை
“லயன் ராக்” என்றும் அழைக்கப்படும் இந்த பழங்கால பாறை சிகிரியா கோட்டை, ஒரு கற்பனை திரைப்படத்தின் பின்னணியில் இருந்து நேரடியாக உணரப்படுகிறது. இது 1982 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக நியமிக்கப்பட்டது மற்றும் அதிக அளவில் பார்வையிடப்படும் சுற்றுலா தலமாக மாறியுள்ளது.அங்கு குழந்தைகள் மலையேற்றத்தையும், ராஜாக்கள், ராணிகள் மற்றும் மறைக்கப்பட்ட ஓவியங்கள் பற்றிய கதைகளை அறிந்து கொள்ள ஒரு முக்கிய இடமாக இருக்கும்.
கொஸ்கொட கடல் ஆமை பாதுகாப்பு இடம்
1988 ஆம் ஆண்டு டட்லி பெரேராவால் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் உள்ளூர் கடல் ஆமைகளின் செயல்பாட்டைக் கண்காணித்து, உள்ளூர் கூடு கட்டும் இடங்களைப் பாதுகாப்பதாகும். கொஸ்கொட ஆமை குஞ்சு பொரிக்கும் நிலையத்தைப் பார்வையிடவும், அங்கு குட்டி ஆமைகள் கடலில் விடப்படுவதற்கு முன்பு அவை பராமரிக்கப்படுவதைக் காணலாம்.பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் பற்றி உங்கள் குழந்தைகளுக்குக் கற்பிக்க இது ஒரு சிறந்த வழியாகும்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan