செப்டம்பர் 1-ஆம் தேதி இந்தோனேஷியாவில் பாலித் தீவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் லிப்ட் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் ஐந்து பேரும் அங்கு பணி புரியும் ஊழியர்கள்.
அவர்கள் லிப்டை பயன்படுத்தி ஊழியர்கள் மேலே சென்று கொண்டிருந்தனர். சென்றுக்கொண்டிருந்தபோது அதன் கம்பி அறுந்து விழுந்தது.
அது மிகவேகமாக 100 மீட்டர் ஆழத்திற்கு கீழே சென்று விழுந்தது. சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர். மருத்துவமனைக்கு மூவர் கொண்டு செல்லப்பட்டனர்.
லிப்ட் யில் 3 பெண்களும், 2 ஆண்களும் இருந்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.