கலிபோர்னியாவில் 45 டன் எடை கொண்ட கஞ்சா பைகள் கண்டுபிடிப்பு..!!
அமெரிக்காவில் 100 மில்லியன் டாலர் மதிப்புள்ள கஞ்சாவை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
ஆனால் அது யாருக்கு சொந்தமானது என்பது தெரியவில்லை.
கலிபோர்னியாவின் ஓக் ஹில்ஸில் புதிதாக கட்டப்பட்ட கிடங்கில் இருந்து புகை வருவதை அக்கம்பக்கத்தினர் கவனித்தனர்.
450 சதுர மீட்டர் கிடங்கில் முழுவதும் கஞ்சா பைகள் நிரப்பப்பட்டுள்ளன.
மொத்தம் 3,000 பைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
அவற்றின் கிட்டத்தட்ட 45 டன் எடை இருக்கும் என்று கூறப்படுகிறது.
பைகளை அங்கிருந்து அகற்ற இரண்டு நாட்களில் 51 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.
ஆனால் அவை அனைத்தும் யாருடையது என்பது மர்மமாகவே உள்ளது.
கலிபோர்னியாவில் கஞ்சாவை பயன்படுத்த உரிமை உண்டு. ஆனால் அதை வளர்க்க கட்டபூர்வமான உரிமம் வைத்திருப்பது அவசியமாகும்.
Follow us on : click here