சிங்கப்பூரில் புதிய ஆலையை திறக்க உள்ள ஜெர்மனியின் Siemens நிறுவனம்.
இது தென்கிழக்காசியாவில் மிகப் பெரிய ஆலையாக இருக்கும்.
அதற்காக சிங்கப்பூரில் சுமார் 300 மில்லியன் வெள்ளியை நிறுவனம் முதலீடு செய்ய உள்ளது.
2025 அக்டோபர் மாதத்தில் ஆலை திறக்கப்படும். அப்போது கிட்டத்தட்ட 400 புதிய வேலைகள் உருவாக்கப்படும்.
இந்த ஆலை ஆதரித்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் செயல்படும்.
இந்த ஆலை தொழில்துறை கணினிகளையும், மனித – இயந்திர இடைமுக தயாரிப்புகளை உருவாக்கும் என்று கூறப்படுகிறது.