பண மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக 40 பேர் மீது குற்றம் சாட்டப்படவுள்ளது…!!!

பண மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக 40 பேர் மீது குற்றம் சாட்டப்படவுள்ளது...!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பண மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக 40 நபர்கள் மீது நீதிமன்றத்தில் செப்டம்பர் 9 முதல் செப்டம்பர் 11 வரை குற்றஞ்சாட்டப்பட உள்ளது.

இவர்கள் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்ற உதவியதாகக் கூறப்படுகிறது.

சந்தேகநபர்கள் அனைவரும் 18 முதல் 43 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிய வந்துள்ளது.

மேலும் இதில் 33 பேர் பெண்கள் மற்றும் ஏழு பேர் ஆண்கள் என்று தெரியவந்துள்ளது.

இவர்கள் தங்களது இணைய வங்கி மற்றும் ஏடிஎம் அட்டை தொடர்பான விவரங்களை மோசடி நபர்களிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும் அவர்கள் தங்கள் வங்கிக் கணக்குகள், சிங்பாஸ் விவரங்களைக் கொடுத்ததாகவோ அல்லது விற்றதாகவோ சந்தேகிக்கப்படுகிறது.

விசாரணையில், குற்றவாளிக் கும்பல் அவற்றைப் பயன்படுத்தி பண மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டது தெரியவந்தது.

சிங்கப்பூர் காவல்துறை இந்தத் தகவலை வெளியிட்டது.

2023ஆண்டு சட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.

அதன்படி காவல்துறையினரால் பணம் மோசடி செய்ய உதவிய சந்தேக நபர்கள் பிடிபட்டு குற்றஞ்சாட்டப்படுவது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்பாஸ் கடவுச்சொல் உள்ளிட்ட விவரங்களை மற்றவர்களுக்கு தெரிவித்தல் போன்ற குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால்,மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

மோசடி செய்பவர்களுக்கு வங்கி கணக்கு உள்ளிட்ட விபரங்களை பகிர்ந்தால் அவருக்கு குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என தண்டனை ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Follow us on : click here ⬇️