சுரங்கப்பாதையில் சிக்கிய கொண்ட 40 கட்டுமான தொழிலாளர்கள்!! இடிபாடுகள் வழியாக ஆக்சிஜன் சப்ளை!!

நவம்பர் 12ஆம் தேதி அன்று இந்தியாவின் வட மாநிலமான உத்தரகாண்டில் கட்டுமானத்தில் இருந்த 4.5 கிலோமீட்டர் தொலைவிலான சாலை சுரங்கப்பாதையில் சுமார் 200 மீட்டர் இடிந்து விழுந்தது விபத்து ஏற்பட்டது.

இதில் குறைந்தது 40 கட்டுமானத் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டுள்ளதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர்.

சுரங்கப்பாதையில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணியில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இடிபாடுகளை அகற்றும்போது மேலும் இடிபாடுகள் ஏற்படுவதால் மீட்புப் பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு குழுவினர் வெளியேறி மற்றொரு குழுவினர் நுழையும்போது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

சுரங்கப் பாதையில் சிக்கி உள்ளவர்களுக்கு இடிபாடுகள் வழியாக ஆக்ஸிஜன் சப்ளை செய்யப்படுகிறது.

ஆக்சிஜன் செலுத்தும் குழாய் மூலம் சிக்கிய தொழிலாளர்களை தொடர்பு கொண்ட போது அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவில் பெரிய கட்டுமானத் தளங்களில் இது போன்ற விபத்துகள் அடிக்கடி ஏற்படுவது வழக்கம் என்று கூறப்படுகிறது.