3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஜாடி!! சிறுவனின் ஆர்வத்தால் சுக்குநூறானது!!
இஸ்ரேலிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த 3,500 ஆண்டுகள் பழமையான ஜாடியை 4 வயது சிறுவன் தவறுதலாக உடைத்தான்.
அந்த ஜாடி அருங்காட்சியகத்தின் நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்தது.
அந்த ஜாடி வைக்கப்பட்டிருந்த இடத்தைச் சுற்றிலும் கண்ணாடி போன்ற எந்த ஒரு பாதுகாப்பு அம்சமும் காணப்படவில்லை.
பழங்காலப் பொருட்களை வெளிப்படையாக காட்சிப்படுத்துவது பொருளின் சாரத்தை வெளிக்கொணர உதவும் என்பது அருங்காட்சியகத்தின் நம்பிக்கை.
ஜாடியில் என்ன இருக்கிறது என்பதை அறிய சிறுவன் ஆர்வமாக இருந்ததாக சிறுவனின் தந்தை கூறினார்.
சிறுவன் ஜாடியை கொஞ்சம் வெளியே இழுத்ததால் அது விழுந்து நொறுங்கியதாக கூறப்படுகிறது.
அருங்காட்சியப் பொருட்களை வேண்டுமென்றே சேதப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அருங்காட்சியகத்தின் இயக்குனர் இன்பால் ரிவ்லின்,சிறுவன் ஜாடியை வேண்டுமென்றே உடைக்கவில்லை என்று பிபிசியிடம் கூறினார்.
ஜாடியை சரிசெய்ய நிபுணர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறியது.
இந்த சிறப்புமிக்க ஜாடியானது, ஒயின் மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்ற உள்ளூர் பொருட்களை எடுத்துச் செல்வதற்காகவே பயன்படுத்தப்பட்டது.
இது விவிலிய மன்னர் டேவிட் மற்றும் சாலமன் மன்னர் காலத்திற்கு முந்தையது மற்றும் கிழக்கு மத்திய தரைக்கடல் கடற்கரையில் உள்ள கானான் பகுதியின் சிறப்பியல்பை எடுத்துக் கூறும் வகையில் உள்ளது.
மேலும் உடைந்த ஜாடி விரைவில் சரி செய்யப்பட்டு மீண்டும் காட்சிக்கு வைக்கப்படும் என அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது.
Follow us on : click here