சாலை விதிகளை மீறியதற்காக 32 சைக்கிள் ஓட்டிகளுக்கு அபராதம்...!!!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் அனுமதிக்கப்பட்ட அளவை விட பெரிய குழுவாக சாலையில் சைக்கிள் ஓட்டியதால் 32 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதனை போக்குவரத்து காவல்துறையும்,நிலப் போக்குவரத்து ஆணையமும் இணைந்து வெளியிட்ட கூட்ட அறிக்கையில் தெரிவித்தன.
இந்த ஆண்டு ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை அதிகாரிகள் அமலாக்கப் பணியில் ஈடுபட்ட போது இந்த சைக்கிள் ஓட்டிகள் பிடிபட்டதாக கூறினர்.
அமலாக்க நடவடிக்கையின் போது, சைக்கிள் ஓட்டிகள் சாலை விதிகளை பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சாலையில் செல்லும் வாகனங்கள் சாலை விதிகளை முறையாக பின்பற்றி நடக்க வேண்டும் என்று காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டது.
சைக்கிள் ஓட்டிகள் ஒரு நீண்ட வரிசையில் 5 பேர் வரை செல்லலாம்.10பேர் இருந்தால் இரண்டு வரிசையாக பயணிக்க வேண்டும். இப்படி கூட்டமாக சைக்கிளில் சென்று பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துமாறு செல்லக்கூடாது என்று காவல்துறை எச்சரித்தது.
விதிகளை கடைபிடிக்காமல் மீறுபவர்களுக்கு 150 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம்.
சாலை விதிகளை மீறுவோர் மீது அமலாக்கத்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டது.
Follow us on : click here