உரிமம் இல்லாமல் ட்ரோன்களை இயக்கி சிக்கிய 309 பேர்!! நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு!!

உரிமம் இல்லாமல் ட்ரோன்களை இயக்கி சிக்கிய 309 பேர்!! நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு!!

சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் உரிமம் இல்லாமல் ட்ரோன்களை இயக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தது. அவர்களுக்கு நீதிமன்றத்தில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டுள்ளது.

சுமார் 309 பேர் பிடிப்பட்டனர். அவர்களில் சிலருக்கு ஆலோசனையும், சிலருக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

8 தனிநபர்கள் மற்றும் 7 நிறுவனங்களுக்கு 4,000 முதல் 45,000 வெள்ளி வரை நீதிமன்றத்தில் அபராதம் விதிக்கப்பட்டது.

உரிமம் இல்லாமல் ட்ரோன்களை இயக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தது.

இவ்வாறு உரிமம் இல்லாமல் ட்ரோன்களை இயக்குவது பொது மக்களுக்கும், விமானங்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் என்றும் அது கூறியது.

சாங்கி விமான நிலையத்திலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளதாக ஆணையம் தெரிவித்தது.

விமான நிலையம் அருகே உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக இயக்குவது ஆபத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகம் என்றும் கூறியது.

அந்த தகவலை கொண்ட அறிவிப்புகள் பாசிர் ரிஸ்-பொங்கோல், தெம்பனீஸ், ஈஸ்ட் கோஸ்ட் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியது.

அதோடு கட்டிடங்களில் உள்ள லிஃப்ட்களிலும் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தது.

ஆலோசனை கடிதங்கள் அந்த பகுதிகளில் வசிப்பவர்களுக்கு
வழங்கப்படும்.