சிங்கப்பூரில் நேற்று முதல் பிறக்கும் ஒவ்வொரு சிங்கப்பூர் பிள்ளைக்கும் குழந்தை போனஸ் அதிகரிக்கப்படும். அதாவது 3000 ஆயிரம் வெள்ளிக்கு அதிகரிக்கும்.
ஒவ்வொரு சிங்கப்பூர் குடும்பத்தில் பிறக்கும் முதல் மற்றும் இரண்டாம் குழந்தைகளுக்கு 8,000 ஆயிரம் வெள்ளி வழங்கப்பட்டது. மூன்றாவது குழந்தைக்கு 10,000 ஆயிரம் வெள்ளி வழங்கப்பட்டது.
இந்த புதிய திட்டத்தால் இனி முதல் குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கும் 11,000 ஆயிரம் வெள்ளி போனஸ் வழங்கப்படும்.
மூன்றாவது பிள்ளைக்கு 13,000 ஆயிரம் வெள்ளி வழங்கப்படும்.
குழந்தைகளை வளர்க்கும் செலவுகளை சமாளிக்க இந்த புதிய திட்டம் உதவும். குழந்தை பிறந்து 18 மாதங்களில் 9,000 வெள்ளி வரையிலான ரொக்கத்தைப் பெற்றோர்கள் எதிர்பார்க்கலாம்.
குழந்தைகள் ஆறரை வயதாகும் வரை பெற்றோர்களுக்கு ஒவ்வொரு ஆறு மாதங்களிலும் 400 வெள்ளி வழங்கப்படும் என்று தெரிவித்தது.
இந்த திட்டம் மூலமாக குழந்தைகள் தங்கள் தொடக்கப்பள்ளி செல்லும் வரை பெற்றோர்களுக்கு ஆதரவு வழங்கப்படும் என்று துணைப் பிரதமருமான நிதி அமைச்சர் தெரிவித்தார்.