Tottenham Hotspur மைதானத்தில் சேதம் ஏற்படுத்தியதற்காக 30 வயது நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.அவர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பின்னர் அவர் புதன்கிழமை அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.
யூத எதிர்ப்புக்கும், இச்சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் Spurs-ன் ரசிகர்கள் பலர், யூத சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது பிரிட்டனில் யூத எதிர்ப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 12ஆம் தேதி வரை 105 மதவெறி சம்பவங்களும், 75 மதவெறி குற்றங்களும் பதிவாகி இருப்பதாக காவல்துறை தெரிவித்தனர்.