கார் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் கைது…!!!

கார் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் கைது...!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் அப்பர் சிராங்கூன் சாலையில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் கார்களை திருடியதாக சந்தேகத்தின் பெயரில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் 16 முதல் 17 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்கள் என தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து கடந்த டிசம்பர் 7ம் தேதி போலீசில் புகார் செய்யப்பட்டது.

காவல்துறையினரின் விசாரணையில் சந்தேக நபர்கள் பிடிபட்டனர்.

இதனால் மூன்று இளைஞர்களையும் காவல்துறையினர் நேற்று (டிசம்பர் 10)கைது செய்தனர்.

அவர்கள் மீது இன்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.