சிங்கப்பூர் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 3 மலேசியர்கள் கைது..!!!

சிங்கப்பூர் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 3 மலேசியர்கள் கைது..!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூர் கடல் எல்லைக்குள் சிறிய படகில் சட்டவிரோதமாக நுழைந்த மூன்று மலேசியர்களை கடலோர காவல்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 18) அதிகாலை 2.05 மணியளவில் சிங்கப்பூரின் வடமேற்கு கடல் பகுதியில் உள்ள புலாவ் சரிம்பன் தீவுக்குள் நுழைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒரு சிறிய படகில் மூவரையும் பார்த்ததும் கடலோர காவல்படை அதிகாரிகள் உடனடியாக அவர்களை அணுகினர்.

அதிகாரிகள் நெருங்கி வருவதைக் கண்டதும், மூவரும் விரைவாக படகை மலேசியா நோக்கி செலுத்தினர்.

அதிகாரிகளிடமிருந்து தப்பிக்க அவர்கள் படகில் ஆபத்தான முறையில் பயணித்தனர்.

மேலும் படகு இரண்டு முறை கடலோர காவல்படை கப்பலில் மோதியது.

அதிகாரிகளிடமிருந்து தப்பிப்பதற்காக படகை வேகமாக செலுத்திய பொழுது இரண்டு மலேசியர்கள் படகில் இருந்து கீழே விழுந்தனர்.

இருப்பினும், அவர்கள் மீண்டும் படகில் ஏறி தப்பிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.

சட்டவிரோதமாக நுழைந்தவர்களை கைது செய்யும் போது ஒரு அதிகாரிக்கு லேசான காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களின் வயது 28 முதல் 47க்குள் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில், 28 வயது படகு ஓட்டுநர் ஒருவர் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதற்காகவும், அதிகாரிகளின் உத்தரவுகளை மீறியதற்காகவும் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.