இம்மாதம் தீவு முழுவதும் 16,17-ஆம் தேதி சோதனை நடத்தப்பட்டது.அதில் 27 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் வெளிநாட்டு ஊழியர்களை சேர்க்கும் பிரச்சனைகளில் சமந்தப்பட்டவர்கள்.
வேலை அனுமதி விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்தது,சட்டவிரோதமாக வேலைக்கு ஆள் சேர்ப்பது,வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக வேலையில் இல்லாத சிங்கப்பூரர்களுக்கு மத்திய சேமநிதி தொகையை ஆகிய குற்றங்களுக்காக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
19 இடங்களில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
குடியிருப்பு இடங்கள்,அலுவலகங்கள், உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்கள் இதுவரை 290 வெளிநாட்டு ஊழியர்களைச் சட்ட விரோதமாக அழைத்து வந்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது
கைது செய்யப்பட்ட இடங்களில் மடிக்கணினி, கைத்தொலைபேசி உள்ளிட்ட 80 சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
முறையான வேலை அனுமதியின்றி வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு சேர்க்கும் முதலாளிகளுக்கு குறைந்தது 5,000 வெள்ளி அபராதம் விதிக்கக்கூடும்.
அவர்களுக்கு 12 மாதங்கள் சிறைத் தண்டனையும் விதிக்கக்கூடும்.
அல்லது இவ்விரண்டுமே விதிக்கப்படலாம்.
அதன்பிறகு அவர்கள் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்க அனுமதி கிடையாது.