கடன் வாங்கியவர்களுக்கு தொல்லை கொடுத்த 24 வயதுடைய பெண்!!
கடன் வாங்கியவர்களுக்கு தொல்லை கொடுத்ததாக 24 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த பெண் வாட்டர்லூ ஸ்ட்ரீட் மற்றும் யீஷின் அவென்யூ 6 ஆகிய இரண்டு பகுதியிலும் உள்ள இரண்டு வீடுகளுக்கு தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இரண்டு வீடுகளின் கதவுகளைப் பூட்டியதோடு மட்டும் அல்லாமல் கடனை திருப்பி தர சொல்லி எழுதப்பட்டிருந்த எச்சரிக்கை கடிதங்களையும் விட்டு சென்றுள்ளார்.
இச்சம்பவம் குறித்து உட்லண்ட்ஸ் பகுதி காவல்துறை விசாரணை மேற்கொண்டது.அந்த பெண்ணின் அடையாளத்தை கண்டறிந்து நவம்பர் 20 ஆம் தேதி (நேற்று) கைது செய்யப்பட்டார்.
முதற்கட்ட விசாரணையில் ,அந்த பெண் இன்னும் சில கடன்முதலை தொல்லைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது .நவம்பர் 22 ஆம் தேதி அவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.
கடன்முதலை துன்புறுத்தலில் முதல்முறையாக ஈடுபடுவோருக்கு 5000 முதல் 50000 வெள்ளி வரை அபராதம், 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை, 6 பிரம்படிகள் வரை தண்டனை கிடைக்கலாம்.
Follow us on : click here