2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டி : முதல் அணியாக தகுதி பெற்று அசத்திய ஜப்பான்!!

2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டி : முதல் அணியாக தகுதி பெற்று அசத்திய ஜப்பான்!!

23 வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் கனடா,மெக்சிகோ மற்றும் அமெரிக்காவில் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது.

இந்த தொடரில் மொத்தம் 48 அணிகள் பங்கேற்கும் என்றும், மூன்று நாடுகள் தவிர மற்ற அணிகள் தகுதிச் சுற்று மூலம் தேர்வு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

கால்பந்து போட்டிகள் தகுதி சுற்று ஆட்டங்கள் கண்டங்கள் வாரியாக நடைபெற்று வருகின்றன.

இந்த போட்டிகளில் ஆசிய மண்டல அணிகளுக்கான தகுதி சுற்றின் 3 வது சுற்றில் `சி’ பிரிவில் இடம் பிடித்துள்ள ஜப்பான் அணி தனது 7 வது லீக் போட்டியில் பக்ரைனை வீழ்த்தி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ஜப்பான் அணியில் தைச்சி கமடா மற்றும் குபோ தலா ஒரு கோல் அடித்தனர்.

இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி ஒரு டிராவை பெற்ற ஜப்பான அணி தனது பிரிவில் முதலிடத்தை பிடித்துள்ளது.

இன்னும் மூன்று போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் தனது பிரிவில் முதல் இரண்டு இடங்களுக்குள் வரும் என்று உறுதியாகி உள்ளது.

இதன் மூலம் உலகக்கோப்பைக்கு தகுதி பெற்று அசத்தியது.

ஜப்பான் அணி 2026 ஆம் ஆண்டு உலக கோப்பைக்கு தகுதி பெற்ற முதல் அணி என்ற பெருமையை பெற்றது.

தொடர்ச்சியாக எட்டாவது முறையாக உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெற்று பெருமையை சேர்த்துள்ளது.

Exit mobile version