2025 FIFA உலகக் கோப்பைப் போட்டி!! எங்கு? எப்போது தொடங்கும்?

2025 FIFA உலகக் கோப்பைப் போட்டி!! எங்கு? எப்போது தொடங்கும்?

2025 ஆம் ஆண்டு FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டி அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் நடைபெறும்.

உலகம் முழுவதும் உள்ள தலைச்சிறந்த 32 குழுக்கள் இப்போட்டியில் பங்கேற்கவுள்ளன.

போட்டிகள் அடுத்த ஆண்டு ஜூன் 15-ஆம் தேதி ஆரம்பமாகும்.

நியூ ஜெர்சியில் உள்ள METLIFE மைதானத்தில் இறுதிப் போட்டி ஜூலை 13-ஆம் தேதி நடைபெறும்.

இந்த மைதானம் 2010-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது.

METLIFE அரங்கில் ஒரே நேரத்தில் 82,500 பேர் வரை இருக்க முடியும்.

மேலும் 2026-ஆம் ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டி அந்த மைதானத்தில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.