2025-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் டெஸ்ட் அடிக்கலாமா? தற்போதைய நிலவரம் என்ன?

2025-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் டெஸ்ட் அடிக்கலாமா? தற்போதைய நிலவரம் என்ன?

2025 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் டெஸ்ட் அடிப்பது குறித்த தகவல்கள் இதோ!!

கடந்த மாதம் இந்தியாவில் டெஸ்ட் அடிப்பது குறித்த தகவல்களை பதிவிட்டியிருந்தோம்.தற்போதைய நிலவரம் என்ன? டெஸ்ட் சென்டர்களில் அட்மிஷன் நடைபெறுகிறதா? என்பது குறித்த தகவல்களை தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

லிங்க் :

ஒரு சிலர் சிங்கப்பூருக்கு எப்படியாவது சென்று அதன்பின் அங்கு டெஸ்ட் அடிக்கலாம் என்று நினைக்கின்றனர்.சிங்கப்பூர் சென்ற பின் டெஸ்ட் அடிக்கலாமா? அதற்கு என்ன வழிமுறைகள் என்பது குறித்து இப்பதிவில் காண்போம்.

சிங்கப்பூரில் இவ்வாண்டு டெஸ்ட் அடிப்பதற்கான விதிமுறைகளில் எந்தவித மாற்றமும் இல்லை.

எந்தெந்த பெர்மிட்டில் சென்றால் சிங்கப்பூரில் டெஸ்ட் அடிக்கலாம் :

Pcm permit,Shipyard permit இல் செல்பவர்கள் அங்கு டெஸ்ட் அடிக்கலாம்.ஆனால் அதற்கு கம்பெனி லெட்டர் தேவை.

S-pass,E-pass இல் Construction துறையில் இருப்பவர்கள் டெஸ்ட் அடிக்கலாம் .அது மட்டுமல்லாமல் கம்பெனி லெட்டர் தேவையில்லை. Construction துறையை தவிர மற்ற துறைகளில் S PASS,E PASS இல் வேலை செய்தால் டெஸ்ட் அடிக்க இயலாது.

S-pass,E-pass இல் Construction துறையில் இருப்பவர்கள் கம்பெனியில் அனுமதி கேட்க தேவையில்லை. நேரடியாக டெஸ்ட் அடிப்பதற்காக சென்டருக்கு செல்லலாம்.

S-pass,E-pass இல் இருப்பவர்கள் ஏன் டெஸ்ட் அடிக்க வேண்டும் என்று ஒரு சிலர் கேட்கின்றனர்.

தற்போது S-pass,E-pass இல் செல்பவர்களுக்கான கோட்டா குறைவாக இருக்கிறது
இந்த பாஸ்களில் வேலை செய்பவர்களுக்கு சம்பளம் அதிகமாக கொடுக்க வேண்டும் என்றும் அதன் சம்பள வரம்பும் உயர்த்தப்பட்டு வருகிறது.

S-pass,E-pass இல் இரண்டு வருட பெர்மிட்டில் சிங்கப்பூர் சென்றிருந்தால் இரண்டு வருடம் முடிந்த பின் ரினிவல் செய்வதற்கான வாய்ப்பு மிகக் குறைவு . முன்னதாகவே நீங்கள் அங்கு டெஸ்ட் அடித்திருந்தால் ஒரு வேலை ரினிவல் கிடைக்காதபட்சத்தில் அதே சம்பளத்தில் அதே வேலைக்கு Work பெர்மிட்டில் மாறமுடியும்.

Shipyard permit ,PCM permit இல் சென்று சிங்கப்பூரில் டெஸ்ட் அடிப்பதற்கான வழிமுறைகள் :

Shypiyard permit,PCM permit ஆகிய பெர்மிட்டில் செல்பவர்கள் டெஸ்ட் அடிப்பதாக இருந்தால் கண்டிப்பாக கம்பெனி லெட்டர் தேவை.

கம்பெனியில் லெட்டர் வாங்குவதில் ஒரு சில பிரச்சனை இருக்கிறது . Shypiyard permit,PCM permit இல் வேலை செய்பவர்கள் அதே கம்பெனியில் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் வேலை பார்க்கலாம்.கம்பெனியே டெஸ்ட் அடிப்பதற்கான லெட்டர் கொடுக்கும் வாய்ப்பு குறைவு.நீங்கள் டெஸ்ட் அடித்தபின் வேறு கம்பெனிக்கு மாறி விடுவீர்கள் என்று எண்ணி டெஸ்ட் அடிப்பதற்கான லெட்டர் கொடுக்க மாட்டார்கள்.

S-pass,E-pass இல் இருப்பவர்களுக்கு என்ன மாதிரியான டெஸ்ட் இருக்கிறது என்பதை காணலாம்.


Electrical,
Painting,
Scaffolding
என பல trade கள் உள்ளன.அதில் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்து டெஸ்ட் அடிக்கலாம்.

சிங்கப்பூரில் டெஸ்ட் அடிப்பது மிகவும் எளிமையானது.
இந்தியாவில் டெஸ்ட் அடிப்பதாக இருந்தால் அதற்கான கட்டணம் அதிகம் .காத்திருப்பு நேரம் அதிகம்.
இதே சிங்கப்பூரில் டெஸ்ட் அடிப்பது வெறும் மூன்று நாட்களில் முடிந்து விடும்.15 நாட்களில் உங்களுக்கு ரிசல்ட் வந்துவிடும்.

சிங்கப்பூரில் தேக்கா மற்றும் சுங்கங்காடு ஆகிய இடங்களில் டெஸ்ட் சென்டர் உள்ளது.

NTS Permit,TEP PASS இல் செல்பவர்கள் டெஸ்ட் அடிக்க முடியுமா?

NTS Permit,TEP PASS இல் வேலை செய்பவர்கள் டெஸ்ட் அடிக்க முடியாது.NTS PERMIT இல் வேலை செய்பவர்கள் service செக்டர் துறையின் கீழ் வருவதால் கண்டிப்பாக டெஸ்ட் அடிக்க முடியாது.TEP PASS temporary pass டெஸ்ட் அடிப்பதற்கான சாத்தியம் கிடையாது .

சிங்கப்பூரில் டெஸ்ட் அடிப்பதற்கு எவ்வளவு செலவாகும்?

டெஸ்ட் அடிப்பதற்கு $1400 முதல் $1600 வரை செலவாகும்.இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் வரை மட்டுமே செலவாகும்.இந்தியாவில் டெஸ்ட் அடிப்பதற்கு நான்கு லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை கேட்கிறார்கள்.

டெஸ்ட் அடிக்கலாம் என்று கூறி அதிகமான பணம் கேட்டால் கட்ட வேண்டாம்.அவர்களிடம் உத்தரவாதம் (Surety) பெற்று கொண்ட பின் செலுத்துங்கள்.ஏனென்றால் பலர் இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு அங்கு சென்ற பின் டெஸ்ட் அடிக்கலாம் என்று கூறி அதிகமான கட்டணத்தை பெறுகிறார்கள். நீங்கள் சென்ற பின் உங்களை கண்டுகொள்வதில்லை. இதனால் பணத்தை இழந்து மீண்டும் திரும்ப வேண்டிய சூழல் இருக்கும்.

Exit mobile version