மலேசியாவில் காணாமல் போன மூன்று சிங்கப்பூர் சுற்றுலாப் பயணிகள் மீட்பு!!

மலேசியாவில் காணாமல் போன மூன்று சிங்கப்பூர் சுற்றுலாப் பயணிகள் மீட்பு!!

சிங்கப்பூர்: மலேசியாவின் சிலாங்கூரில் ட்ரக்கிங் செய்வதற்காக சென்ற மூன்று சிங்கப்பூர்கள் மற்றும் ஒரு மலேசிய நபர் என நான்கு பேர் காணாமல் போனது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் குறித்து மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக விரைந்த மீட்பு குழுவினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இவர்கள் நான்கு பேரையும் மீட்பு குழுவினர் சுமார் 6 மணி நேரம் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஜூன் 30 அன்று மலையேறிய நான்கு நபர்களும் காணாமல் போனது குறித்த தகவல் வந்ததாக தீயணைப்பு வீரர்கள் கூறினர்.

அவர்கள் நான்கு பேரையும் மீட்பு குழுவினர் ஜூன் 30 இரவு 11.20 மணியளவில் கண்டுபிடித்தனர்.

பின்னர் அதிகாலை 1 மணியளவில் (ஜூலை 1) தீயணைப்பு வீரர்கள் அவர்களை மீட்டதாக 8 வேர்ல்ட் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அவர்கள் நான்கு பேரும் 22 வயது மதிக்கத்தக்கவர்கள் என்று தெரியவந்துள்ளது.

மேலும் அவர்களுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என்றும் நல்ல நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து மலேசிய காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.