தாமாக முன் வந்து Healthier SG திட்டத்தில் பதிவு செய்து மருத்துவரைப் பார்ப்பவர்களுக்கு $20 வெள்ளி சுகாதார புள்ளிகள்!

நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் பொது மருத்துவரைத் தொடர்ந்து பார்ப்பவர்கள் Healthier SG திட்டத்தின் மூலம் பதிவு செய்து பரிசோதனைச் செய்து கொள்ளலாம்.

இத்திட்டத்தில் வரும் மே மாதம் முதல் பதிவு செய்து கொள்ளலாம்.

இத்திட்டத்தில் தாமாக முன்வந்து பதிவு செய்த பின் முதல் சுகாதார ஆலோசனை பெறுபவர்களுக்கு 20 வெள்ளி சுகாதார புள்ளி வழங்கப்படும்.

இதனை நேற்று நாடாளுமன்றத்தில் சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் அறிவித்தார்.

வரும் ஜூலை மாதத்திலிருந்து Healthier SG தேசிய சுகாதாரத் திட்டம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படும் என்று சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

இத்திட்டத்தில் முதலில் 60 வயதுடையவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவித்தது.

Healthier SG திட்டம் மூலம் மருந்தகத்தில் பதிவு செய்து மருத்துவரை நேரடியாகப் பார்ப்பவர்களுக்கு 3000 சுகாதாரப் புள்ளிகள் தரப்படும் என்றும் தெரிவித்தார். அதாவது, அதன் மதிப்பு 20 வெள்ளி.

வீடுகளுக்கு அருகே இத்திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.