தேசிய தின நுழைவுச்சீட்டைப் பெற வித்தியாசமான முறையை கையில் எடுத்த 2 இளைஞர்கள்..!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் தேசிய தின நுழைவுச்சீட்டை பெறுவதற்காக இருவர் தங்களது நாட்டுப்பற்றை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்தி உள்ளனர்.
இவர்களின் அந்த வீடியோ தான் இப்போது இணையத்தில் அதிகம் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
அதில் ஒருவர் சிங்கப்பூர் கொடியில் இடம்பெறும் நிலவு,நட்சத்திரம் போன்றவற்றை தன் நெஞ்சில் படமாக வரைந்துள்ளார். மேலும் கொடியின் சிவப்பு நிறத்திற்காக அவர் தனது நெஞ்சப் பகுதியை பல மணி நேரம் வெயிலில் படுமாறு வைத்து தோலை சிவக்க வைத்துள்ளார். இது பார்ப்பதற்கு அப்படியே தேசிய கொடியை போன்று இருந்தது.
மற்றொருவர் தன் தலைமுடியை தேசிய கொடியை போன்று வடிவமைத்து அதில் சாயத்தையும் பூசியுள்ளார்.
தேசிய தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, பென் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தேசிய தின அணி வகுப்பிற்கான 10 டிக்கெட்டுகளை இலவசமாக வழங்குவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்த டிக்கெட்டை பெற விரும்புவோர் கமெண்ட் பகுதியில் சிங்கப்பூருக்கு சிறந்த கடிதம் ஒன்றை எழுத வேண்டும் அதுதான் நுழைவுச்சீட்டுக்கான போட்டி என்று கூறியிருந்தார்.
மேலும் சிறந்த கடிதம் எழுதுவோருக்கு நுழைவுச்சீட்டு வழங்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.
எல்லோரும் கவிதைகள் மற்றும் கடிதங்கள் எழுதிக் கொண்டிருக்கும் போது, மைக்கல் கோலின்ஸ் மற்றும் பால் இஹுயி இருவரும் நாட்டின் மீது தங்கள் அன்பைக் காட்டும் வீடியோ வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் பெற்றனர்.
இதற்காக அவர்கள் ஒரு பூங்காவில் மணிக்கணக்கில் நின்றிருக்க வேண்டும்.
பென் இதை பார்த்தால் உதவி செய்யுங்கள் என்று அவர்கள் கூறியது வீடியோவில் பதிவானது. பென் இவர்களின் வீடியோவை பார்த்து மனம் மகிழ்ந்து அவர்களுக்கு டிக்கெட்டையும் வழங்கினார்.
தேசிய தின நுழைவு சீட்டை பெற்றதற்காக இளைஞர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர்.
Follow us on : click here