வியட்நாமில் 18 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் இரண்டு பேர் தென்கொரியா நாட்டை சேர்ந்தவர்கள். ஒருவர் சீன நாட்டை சேர்ந்தவர்.அவர்கள் சட்டவிரோதமாக போதைப் பொருளை கடத்திய குற்றத்திற்காக மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
பிடிபட்ட இரண்டு தென்கொரியர்களில் ஒருவர் காவல்துறை அதிகாரி எனவும் தெரிவித்தது.
இந்த தகவலை வியட்நாம் அரசாங்க ஊடகம் சொன்னது.
அவர்கள் கடந்த 2020-ஆம் ஆண்டு மே முதல் ஜூன் 2020 இடையில் சட்டவிரோதமாக சுமார் 216 கிலோகிராம் போதைப்பொருட்களை கடத்தியது மற்றும் வைத்திருந்துள்ளனர்.
சோதனையின் போது 168 கிலோகிராம் அளவிலான அனைத்து வகை போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டது என்றும் ஊடகம் கூறியது.
கம்போடியாவிலிருந்து ஹோ சி மின் நகருக்கு அவைகள் கடத்தப்பட்டது.
உள்நாட்டில் குறைவாக உபயோகப் படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மீதம் உள்ளவைகள் தென்கொரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
தென்கொரியாவுக்கு அனுப்பப்பட வேண்டிய ஒரு கண்டெய்னரில் வியட்நாம் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.சோதனை நடவடிக்கையில் போதைப்பொருட்கள் கண்டறியப்பட்டதாக நீதிமன்ற ஆவணங்களில் தெரிவித்தன.