பொன்னமராவதியில் முத்தமிழ்ப்பாசறையின் 15ஆம் ஆண்டு தமிழர் திருநாள் விழா,புதிய நிர்வாகிகள் பணியேற்று விழா!!

பொன்னமராவதியில் முத்தமிழ்ப்பாசறையின் 15ஆம் ஆண்டு தமிழர் திருநாள் விழா,புதிய நிர்வாகிகள் பணியேற்று விழா !!

புதுக்கோட்டை மாவட்டம்
பொன்னமராவதியில் முத்தமிழ்ப்பாசறையின் 15 ஆம் ஆண்டு தமிழர் திருநாள் விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பணியேற்று விழா புலவர் சிவந்தியப்பன் தலைமையில் நடைபெற்றது.முத்தமிழ்ப்பாசறையின் 15 ஆம் ஆண்டு தமிழர் திருநாள் விழாவின் தொடக்கமாக தமிழன்னை ஊர்வலம் நடைபெற்றது.ஊர்வலத்திற்கு முத்தமிழ்ப்பாசறையின் முன்னாள் தலைவர் மதியழகன் தலைமை தாங்கினார்.அரிமா சங்கத்தலைவர்கள் கருப்பையா, சிவக்குமார்,திருநாவுக்கரசு, ரோட்டரி சங்கத்தலைவர் சி.பூ.முடியரசன்,ஷைன் லயன் சங்கத்தலைவர்கள் கார்த்திக், ஜாகீர் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தை பொன்னமராவதி வர்த்தகர் கழகத்தலைவர் பழனியப்பன், தொழிலதிபர்கள் மணிகண்டன், ஜெயங்கொண்டான் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

சேங்கைஊரணி அருகில் தொடங்கிய ஊர்வலம் புதுப்பட்டி, அண்ணாசாலை ,பேருந்துநிலையம் வழியாக சென்று வள்ளுவர் அரங்கில் நிறைவுற்றது.ஊர்வலத்தில் சிலம்பாட்டம், கோலாட்டம், நையாண்டிமேளம், கட்டைக்கால்,ஜல்லிக்கட்டுக்காளை மற்றும் ஏர்கலப்பை உள்ளிட்டவைகளுடன் தமிழன்னை ஊர்வலம் இடம்பெற்றது. தொடர்ந்து அரங்கில் நடைபெற்ற இயல் அரங்கிற்கு முத்தமிழ்ப்பாசறைத்தலைவர் பாலமுரளி தலைமைவகித்தார்.விழாவில் புதுக்கோட்டை தமிழ்ச்சங்க செயலர் மகாசுந்தர், திரைப்பட இயக்குனர் கண்மணி ராஜாமுகமது,திருக்குறள் முற்றோதல் செய்யும் சிறுவன் தமிழ்ச்செல்வன் ஆகியோருக்கு
தமிழ்ச்சுடர் விருதினை கவிஞர் தங்கம்மூர்த்தி வழங்கி கெளரவித்தார்.

மேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளாக பேரூராட்சித்தலைவர் சுந்தரி அழகப்பன், துணைத்தலைவர் வெங்கடேஷ், பேரூராட்சி உறுப்பினர்கள் ராஜா, சிவகாமி மலைச்சாமி, இசா விக்காசு, நெற்குப்பை பேரூராட்சித்தலைவர் பழனியப்பன், துணைத்தலைவர் கண்ணன் புசலான் ஆகியோரை கவிஞர் தங்கம்மூர்த்தி பாராட்டி கெளரவித்தார்.தொடர்ந்து தமிழ்ச்செம்மல் விருதாளர் நெ.இரா.சந்திரன் தலைமையில் விவாத அரங்கம் நடைபெற்றது.பின்னர் புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா புலவர் சிவந்தியப்பன் தலைமையில், விழாக்குழு தலைவர் சோலையப்பன் வரவேற்புரையில் தொடங்கியது.

புதிய தலைவராக மாரிமுத்து,செயலாளர் தேனப்பன், பொருளாளர் பார்த்தசாரதி, துணைத்தலைவர்களாக அர்ச்சுணன், முகமது அப்துல்லா,துணைச்செயலர்களாக மீனாட்சிசுந்தரம்,சுப்பையா ஆகியோரை பணியில் அமர்த்தி இலக்கியச் செம்மல் தமிழருவிமணியன் சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் பாசறை அறங்காவலர் குழு தலைவர் மாணிக்கவேலு,விழாக்குழு தலைவர் சோலையப்பன்,நிர்வாகிகள் முருகேசன், தட்சிணாமூர்த்தி, ராசாமுகமது, பழநியப்பன், வைகை பிரபா,கருப்பையா, சி.சுமுருகேசன், முருகேசன்,கனகு, சாந்தி, கருப்பையா,சதாசிவம் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்